SBI Cashback Card: பலருக்கும் ஷாப்பிங் செய்வது பிடிக்கும். ஆன்லைன் அல்லது ஆப்லைன் என எந்த விதத்தில் ஷாப்பிங் செய்தாலும், பலர் குறைந்த விலையில் வாங்க விரும்புகின்றனர் அல்லது தள்ளுபடி எதிர்பார்க்கின்றனர். மேலும் எந்த கார்டில் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்து அதில் பொருட்களை வாங்குகின்றனர். இந்நிலையில், எஸ்பிஐ வங்கி சமீபத்தில் எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு (SBI Cashback Card) என்ற புதிய கார்டு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என எந்த பரிவர்த்தனைகளிலும் கேஷ்பேக் நன்மைகளை வழங்குகிறது. இது ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. ஆனா தங்க நகை கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்
எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு, வசதிக்காக மட்டுமல்லாமல், நிதி வெகுமதிகளையும் மேலும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பலவித கேஷ்பேக் விருப்பங்கள் முதல், கட்டணம் குறைப்பு மற்றும் கூடுதல் கட்டண தள்ளுபடிகள் வரை பல ஆபர்களை எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு வழங்குகிறது. இதில் அனைத்து வித ஆன்லைன் செலவினங்களுக்கும் தாராளமாக 5% கேஷ்பேக்கைப் பெற முடியும். அதே போல ஆப்லைன் செலவினங்களில் 1% கேஷ்பேக்கை பெறலாம். மேலும் டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகளை வழங்குகிறது. கார்டில் பெறப்பட்ட கேஷ்பேக் உங்கள் அடுத்த ஸ்டேட்மென்ட் வந்த இரண்டு நாட்களுக்குள் தானாகவே உங்கள் SBI கார்டு கணக்கில் பிரதிபலிக்கும்.
வருடச் செலவுகள் ரூ. 2 லட்சம் வரை இருந்தால் உங்களுக்கு வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் ரூ. 500 முதல் ரூ. 3,000 (ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் கட்டணங்கள் தவிர்த்து) செலவு செய்தால் 1 % தள்ளுபடி கிடைக்கும். இதில் அதிகபட்சம் ரூ. 100 நீங்கள் சேமிக்க முடியும். அதே போல பிற வங்கிகளின் கிரெடிட் கார்டுகளில் இருந்து உங்கள் எஸ்பிஐ கேஷ்பேக் கார்டுக்கு நிலுவையில் உள்ள பணத்தை மாற்றுவதன் மூலம் உங்கள் கிரெடிட் கார்டு செலவுகளை மேம்படுத்த முடியும். குறைந்த வட்டி விகிதத்தையும் EMI-களில் திருப்பிச் செலுத்துவதற்கான வசதியையும் பெறுங்கள், உங்கள் கடன் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கும் போது பணத்தைச் சேமிக்க உதவுகிறது.
இவற்றிக்கு கேஷ்பேக் இல்லை
மெர்சண்ட் EMI, Flexipay EMI மற்றும் பொதுவான செலவுகள், காப்பீடு, பெட்ரோல் மற்றும் டீசல், வாடகை, வாலட், பள்ளி & கல்விச் சேவைகள், நகைகள், இரயில்வே போன்ற பிரிவுகள் உட்பட குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த கேஷ்பேக் பொருந்தாது.
தகுதி வரம்பு
இந்த எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு பெற உங்கள் வயது 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் நிலையான மற்றும் சரிபார்க்கக்கூடிய வருமான ஆதாரம் தேவை. விண்ணப்பதாரருக்கு சாதகமான கடன் வரலாறு முக்கியம்.
கட்டணம்
- பதிவு கட்டணம்: ரூ. 999 + பொருந்தக்கூடிய வரிகள்.
- வருடாந்திர கட்டணம்: ரூ. 999 + ஜிஎஸ்டி (ஒரு வருடத்திற்கு சுமார் ₹1180)
- ரூ. 2 லட்சத்திற்கு மேல் செலவழித்தால் தள்ளுபடி உண்டு.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கான ஜாக்பாட்.. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த புதிய அப்டேட் வந்தாச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ