சிறு சேமிப்பு திட்டங்களின் விதிகளில் மாற்றம், இனி இது அவசியம்: நிதி அமைச்சக உத்தரவு

Small Saving Schemes: சேமிப்பு திட்டங்களின் விதிகளில் அரசாங்கம் மாற்றங்களை செய்துள்ளது. நீங்களும் இப்படிப்பட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2024, 12:08 PM IST
  • மாற்றத்திற்கான காரணம் என்ன?
  • முதலீடு செய்ய பேன் அட்டை இருப்பது அவசியமா?
  • அரசாங்கத்தின் திட்டங்களில் முதலீடு செய்ய இந்த ஆவணங்கள் தேவைப்படும்.
சிறு சேமிப்பு திட்டங்களின் விதிகளில் மாற்றம், இனி இது அவசியம்: நிதி அமைச்சக உத்தரவு title=

Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இந்த சேமிப்பு திட்டங்களின் விதிகளில் அரசாங்கம் மாற்றங்களை செய்துள்ளது. நீங்களும் இப்படிப்பட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Saving Scheme), சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Yojana) மற்றும் தபால் நிலையத் திட்டங்களில் (Post Office Schemes) முதலீடு செய்பவர்களுக்கான விதிகளை அரசு மாற்றி உள்ளது.

இனி இந்த திட்டங்களில் முதலீடு செய்ய, பான் மற்றும் ஆதார் அட்டை இருக்க வேண்டியது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த அரசாங்க திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்திருந்து உங்களிடம் பேன் அல்லது ஆதார் கார்டு இல்லை என்றால் உடனடியாக அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?

பேன் (PAN) அல்லது ஆதார் அட்டை (Aadhaar Card) இல்லாத நபர்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தத் திட்டங்களின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும், இவற்றில் சேர்வதை எளிதாக்கவும் அரசாங்கம் இந்த மாற்றங்களை செய்துள்ளது.

இந்த திட்டங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் உரிமையை பாதுகாப்பதற்காகவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சகம் (Finance Ministry) அரசாங்கத்தின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பான் அட்டையும் அவசியம் என்று தெரிவித்தது. இதற்கு முன்னர் ஆதார் எண் இல்லாமலும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட், டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்

முதலீடு செய்ய பேன் அட்டை இருப்பது அவசியமா?

PPF, SSY, SCSS போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீட்டை செய்வதற்கு முன்னர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டியது அவசியம் என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வரம்பிற்கு மேல் முதலீடு செய்யும்போது பேன் அட்டையையும் காண்பிக்க வேண்டியது அவசியம். அரசாங்கத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் வெளிப்படை தன்மையை அதிகமாக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கணக்கை திறக்கும் போது உங்களிடம் ஆதார் அட்டை இல்லை என்றால் கணக்குத் திறந்து 6 மாதங்களுக்குள் நீங்கள் அதை சமர்ப்பிக்கலாம். இந்த திட்டங்களில் ஒரு வரம்பிற்கும் மேல் முதலீடு செய்பவர்கள் பேன் அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.  

அரசாங்கத்தின் திட்டங்களில் முதலீடு செய்ய இந்த ஆவணங்கள் தேவைப்படும்

- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (Passport size photo)

- ஆதார் எண் அல்லது பதிவு சீட்டு (Aadhaar number or Aadhaar enrollment slip)

- பேன் அட்டை (PAN Card)

மேலும் படிக்க | இந்தியாவில் அதிக வருவாய் தரும் தொழில்கள்-இதை செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News