பிரியாணி அனைவருக்கும் பிரியமானது என்றாலும், அதை நிரூபிக்கும் அறிக்கி ஆச்சரியத்தை அளிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் இந்தியர்கள் நிமிடத்திற்கு 115 ப்ளேட் பிரியாணியை ஆர்டர் செய்ததாக ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
பிரியாணி மீதான காதல் இந்தியாவில் அதிகரித்து வருவதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது. பிரியாணி, சிக்கன் விங்ஸ், குலாப் ஜாமூன், சமோசா என பலவிதமான உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பட்டியலில் இடம் பிடித்தாலும், அதில் முதலிடம் பிடித்தது பிரியாணியே என்று ஸ்டேட் ஈடிஸ்டிக்ஸ் (StatEATstics) அறிக்கை கூறுகிறது.
4.25 லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனர்கள் சிக்கன் பிரியாணியை ஆர்டர் (Food Order) செய்ததாகவும் ஸ்விக்கி கூறுகிறது. 5 மில்லியன் ஆர்டர்கள் பெற்ற சமோசா தான் இந்த வருடத்தில் அதிகம் சாப்பிடப்பட்ட தின்பண்டம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
“இந்தியர்கள் நிமிடத்திற்கு 115 ப்ளேட் பிரியாணி, நியூசிலாந்தின் மக்கள்தொகைக்கு சமமான 5 மில்லியன் சமோசாக்கள் ஆர்டர் செய்துள்ளனர்” என்று Swiggy இன் ஆறாவது ஆண்டு StatEATstics அறிக்கை தெரிவிக்கிறது.
"2020 ஆம் ஆண்டில், நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டன, இது 2021 இல் 115 ஆக உயர்ந்துள்ளது, இது வினாடிக்கு 1.91 ஆக உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
READ ALSO | உடல் எடை குறைய உணவில் பாசிப்பருப்பை கட்டாயம் சேர்க்கவும்
சிக்கன் விங்ஸை விட சமோசா ஆறு மடங்கு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டாலும், பாவ் பாஜி 2.1 மில்லியன் ஆர்டர்களுடன் இந்தியாவின் இரண்டாவது விருப்பமான சிற்றுண்டியாக இருந்தது.
மொத்தம் 2.1 மில்லியன் ஆர்டர்களுடன், ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட இனிப்பு குலாப் ஜாமூன். அதைத் தொடர்ந்து 1.27 மில்லியன் ஆர்டர்களுடன் ரசமலாய் இடம் பிடித்துள்ளது.
Swiggy இல் ஆரோக்கியமான உணவுக்கான தேடல் 2021 இல் இரட்டிப்பாகியது, மேலும் Swiggy HealthHub இல் உள்ள ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உணவகங்கள் ஆர்டர்களில் 200 சதவீதம் அதிகரித்துள்ளன. பெங்களூரு மிகவும் சுகாதார உணர்வுள்ள நகரமாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் மும்பை அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
Instamart 2021 இல் மட்டும் 28 மில்லியன் பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்கப்பட்டுள்ளன. தக்காளி, வாழைப்பழங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை அதிகமாக வாங்கப்பட்ட முதல் ஐந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகும்.
இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்யப்பட்ட மொத்த வாழைப்பழங்கள் சுதந்திர தேவி சிலையை விட 2.6 மடங்கு அதிகமாகும்.
ALSO READ | வெள்ளை முட்டை or பிரவுன் முட்டை... எதை சாப்பிடலாம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR