இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் ஆட்சேர்ப்பு 2022: இந்திய ராணுவத்தில் அரசு பணியில் சேர வேண்டும் என காத்திருந்த இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அவர்களின் காத்திருப்பு முடிந்துவிட்டது. ஏனெனில் சமீபத்தில் இந்திய கடற்படையால் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, இந்திய கடற்படை Tradesman Mate ஆட்சேர்ப்பு 2022 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 112 பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள எந்தவொரு விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 6, 2022 முதல் தொடங்கப்படும் மற்றும் விண்ணப்பத்தின் கடைசித் தேதி செப்டம்பர் 6, 2020 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு மொத்தம் 1 மாதம் உள்ளது. அதன் பிறகு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. Indian Navy Tradesman Mate Recruitment 2022 பதவிகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் குறித்து பார்ப்போம்.
இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022 ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி விவரம்:
இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று 6 ஆகஸ்ட் 2022 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 6, 2022 என்பது நினைவில் கொள்ளுக. டிரேட்ஸ்மேன் மேட் பதவிகளுக்கான விண்ணப்பங்களை சரியான நேரத்தில் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். இல்லையெனில் டிரேட்ஸ்மேன் மேட் பதவிகளை நீங்கள் இழக்க நேரிடும்.
இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022: 10வது தேர்ச்சி
இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் ஆட்சேர்ப்பு 2022 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் ஏதேனும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022: வயது வரம்பு
இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் ஆட்சேர்ப்பு 2022 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயது முதல் 25 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 25 வயது என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வயது வரம்பு 6 செப்டம்பர் 2022 இன் அடிப்படையில் கணக்கிடப்படும் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும்.
இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022: கட்டண விவரம்
இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு 2022 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை அல்லது விண்ணப்பக் கட்டணம் பற்றிய தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படவில்லை. மேலும் தகவலுக்கு நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022: தேர்வு செயல்முறை
நேவி டிரேட்ஸ்மேன் மேட் ஆட்சேர்ப்பு 2022 பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள்விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் போக்கு சோதனைக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் மேட் ஆட்சேர்ப்பு 2022 பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது
டிரேட்ஸ்மேன் மேட் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும், முதலில் இந்திய கடற்படையால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் பிறகு ஆகஸ்ட் 6, 2022 அன்று நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
- முதலில், https://erecruitment.andaman.gov.in/ தளத்திற்கு சென்று Apply Online விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கும், அங்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
- அதன் பிறகு விண்ணப்பப் படிவம் உங்கள் முன் தோன்றும். இதில் பொதுவான விவரங்களை உள்ளிட வேண்டும்.
- இதற்குப் பிறகு தேவையான ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்த பிறகு, இறுதியாக அதன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ