Women Health Tips Tamil : பெண்களில் பலர் அழகான மார்பு வேண்டும் என எதிர்பார்க்கும் சூழலில், பெரிய மார்புகள் அவர்களின் தினசரி வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இவையெல்லாம் பேசப்படாத மற்றும் அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளும்கூட. சில பெண்கள் பெரிய மார்புகள் இருப்பதால் சமூகத்தில் பல சங்கடங்களையும் அனுபவிக்கிறார்கள். அத்துடன் உடல்நல சிக்கல்களையும் சந்திக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பெரிய மார்பு இருக்கும் பெண்களின் பிரச்சனை அவர்களின் உடையில் இருந்தே ஆரம்பிக்கிறது. உடையில் அசௌகரியத்தை எதிர்கொள்ளும் அவர்களுக்கு, பெரிய மார்புகள் அவர்களுக்கு நாட்பட்ட முதுகு வலிக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. இதனால் மார்பக அறுவை சிகிச்சையை நாடுகின்றனர் பல பெண்கள்.
ஆம், பெரிய மார்பு இருக்கும் பெண்களுக்கு திசுக்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக முதுகுவலி, கழுத்து மற்றும் தோள்களில் அமைந்துள்ள தசைகள், தசைநார்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்கு நாட்பட்ட வலியை ஏற்படுத்துகிறது. இதனால் எடையை சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளுக்கு தள்ளப்படும் பெண்கள், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கூடுதல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் மோசமாகலாம். ஏனெனில் மார்பகங்களின் கூடுதல் எடை உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், அதன் சுற்றியுள்ள தசைகள் முழுவதும் கூடுதல் அழுத்தம் முதுகுத்தண்டை பாதிக்கும்.
முதுகுவலி தவிர, பெரிய மார்பகங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை வலி, தோல் எரிச்சல் உள்ளிட்டவைகளையும் ஏற்படுத்தும். உடல் எடை கூடும்போது உருவக் கவலைகளையும் ஏற்படுத்தி உளவியல் சிக்கல்களையும் பெண்களிடையே உண்டாக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்களால் நீண்ட நேரம் நிற்கவும் முடியாது, உட்கார்ந்திருக்கவும் முடியாது. கனமான பொருட்களை தூக்கும்போது தோள்பட்டை வலி இரண்டு மடங்காக இருக்கும். இதில் இருந்து மீள வேண்டும் என நினைக்கும் பெண்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு கட்டாயம் மாற வேண்டும். அதாவது, எடையைப் பராமரிப்பு, தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி, முதுகு வலிக்கு உண்டான பயிற்சி ஆகியவற்றை செய்ய வேண்டும்.
மார்பக அளவை குறைக்கும்போது, தங்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதாக பெண்கள் நினைக்கின்றனர். இதற்காக அறுவை சிகிச்சை செய்யக்கூட தயாராக இருக்கின்றனர். இதனால் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை கட்டாயம் அவர்களுக்கு ஓய்வு அவசியம் தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு தயாராக இருக்கும் பெண்கள் இத்தகைய சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்கள் பலர் மகிழ்ச்சியடைவதாக பார்ப்பதாக தெரிவிக்கின்றனர். ஏனென்றால் இது தோற்றத்தை மேம்படுத்துவதோடு, ஆடை அசௌகரியத்தை குறைத்து, வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது என்பதால், இந்த மகிழ்ச்சி பெண்களிடையே இயல்பாக பார்க்க முடிகிறது என மருத்துவர்கள் தெரவிக்கின்றனர். அதேநேரத்தில் மார்பக அறுவை சிகிச்சையில் பல சிக்கல்களும் இருக்கின்றன. தொற்று, ரத்தப்போக்கு, தழும்புகள், முலைக்காம்பு மாற்றம் போன்ற பிரச்சனைகள் உள்ளன என்பதையும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ