உகாதி 2023: பண்டிகை காலம் துவங்கிவிட்டது!! மார்ச் மற்றும் ஏப்ரல் நாடு முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பங்குனி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த பிரதமை நாளன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது சுப காரியங்கள் துவங்குவதற்கான நாளாகவும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. யுகாதி அன்று செய்யப்படும் உணவு வகைகளில் யுகாதி பச்சடி மிகவும் பிரச்சித்தி பெற்ற உணவாகும். மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து கூறி இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
பொதுவாக புத்தாண்டை நாம் அனைவரும் ஆர்வத்துடனும், அன்புடனும் வரவேற்கிறோம். ஒவ்வொரு புதிய தொடக்கமும் நம்பிக்கையைத் தருகிறது, மேலும் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமானது நம் வாழ்வில் வரவிருக்கும் அனைத்து அற்புதமான விஷயங்களையும் வரவேற்க கொண்டாடப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில், உகாதி கொண்டாடப்படுகிறது.
வீட்டை அலங்கரித்து, மாவிலை கட்டி, விசேஷ உணவுகளை சமைத்து இந்த பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம். உகாதியின் போது தயார் செய்யப்படும் மிகச்சிறந்த உணவுகளில் ஒன்று பச்சடி. அனைத்து வகையான சுவைகளின் கலவையான பச்சடி, வரும் ஆண்டில் அனைத்து வகையான சுவைகளையும் அனுபவிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
உகாதி புனித நாளில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாழ்த்துக்கள் மற்றும் செய்திகளின் பட்டியல் இதோ
- இந்த புத்தாண்டு உங்களுக்கு பல புதிய தொடக்கங்களை அளிக்கட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய உகாதி வாழ்த்துக்கள்!!
- இந்த ஆண்டு அனைத்து செல்வங்களையும் வளத்தையும் உங்களுக்கு அளிக்கட்டும்! இனிய உகாதி நல்வாழ்த்துக்கள்!!
- இந்த ஆண்டு உங்கள் பாதையில் இருந்து அனைத்து இருளையும் அகற்றி வெற்றியை அடைய உங்களுக்கு உதவட்டும். உகாதி வாழ்த்துக்கள்.
- இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் அனைத்து வித வெற்றிகளையும் குவிக்கட்டும். உகாதி நல்வாத்துக்கள்!!
- உங்கள் வாழ்க்கையை ஒரு புதிய திசையில் கொண்டு செல்லும் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். புத்துணர்ச்சியுடன் புத்தாண்டை துவங்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய உகாதி வாழ்த்துக்கள்!!
- சுவையான பச்சடி போல், வரும் வருடத்தில் உங்களுக்கு எல்லாவிதமான சுவைகளும் கிடைக்கட்டும். உகாதி வாழ்த்துக்கள்!!
- உங்கள் வாழ்க்கை வளமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் மாறட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய உகாதி வாழ்த்துக்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ