Flipkart Big Billion Days 2023: ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு சலுகைகள்? முழு விவரம்!

Flipkart Big Billion Days 2023ல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள், மடிக்கணினிகள், டிவிகள் மற்றும் பல பொருட்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2023, 06:44 AM IST
  • பிளிப்கார்ட்டில் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி.
  • டேப்லெட்களை தள்ளுபடி விலையில் தற்போது வாங்கலாம்.
  • ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல தள்ளுபடிகள் உள்ளது.
Flipkart Big Billion Days 2023: ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு சலுகைகள்? முழு விவரம்!  title=

Flipkart Big Billion Days 2023: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை இப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் நேரலையில் உள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்குச் சலுகைகள் நேரலையில் வந்த ஒரு நாள் கழித்து தற்போது அனைத்து பயன்களும் வழங்கப்பட்டுள்ளது.  இந்த விற்பனையானது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலுக்கு போட்டியாக வந்துள்ளது.  இது பொருட்களை இணையத்தில் வாங்குபவர்களுக்கு நல்ல அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. பிளிப்கார்ட் இ-காமர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய விலை குறைப்பு, வங்கி சலுகைகள், பரிமாற்ற சலுகைகள் மற்றும் பல நன்மைகளை இந்த பிக் பில்லியன் டேஸில் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு விற்பனையின் சிறப்பம்சங்களில் முந்தைய தலைமுறை ஐபோன்களின் அதிக சலுகைகள் உள்ளன. ஐபோன் 14, ஐபோன் 13 மொபைல் போன்கள் பெரிய தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இந்த விற்பனையின் போது கிடைக்கும் சலுகைகள் பற்றிய விவரங்களை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2023: நீங்கள் தவறவிட முடியாத சிறந்த 5 டீல்கள்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் பேங்க் ஆஃபர்கள்

பிளிப்கார்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் வங்கி கார்டுகள் மூலம் 10 சதவீத தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது. கூடுதலாக, Paytm வாலட் மூலம் பொருட்களை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.  

சலுகையின் விவரங்கள்

பிளிப்கார்ட் இ-காமர்ஸ் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 80 சதவீதம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் 4K ஸ்மார்ட் டிவிகள் வங்கி தள்ளுபடிகளுக்குப் பிறகு ரூ.17,000க்குள் வாங்கலாம். கேமிங் மானிட்டர்களை சலுகைகளுக்குப் பிறகு ரூ.6,569க்கு வாங்கலாம். ஹெட்ஃபோன்கள்/ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் ரூ. 599 மற்றும் ரூ. 799லிருந்து தொடங்குகின்றன. நீங்கள் புதிய லேப்டாப் வாங்க திட்டமிட்டு இருந்தால் சலுகைகள் போக ரூ.8,990 முதல் வாங்கலாம். 

மேலும் பிளிப்கார்ட் ஐபோன் 14க்கு இந்த விற்பனையில் நல்ல தள்ளுபடிகள் உள்ளது, 76805 ரூபாய்க்குள் வாங்கக்கூடிய சிறந்த சலுகைகளும் உள்ளன.  கூடுதலாக, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 12, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றிற்கு சிறந்த தள்ளுபடிகள் விற்பனையில் உள்ளன.  ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ கடந்த ஆண்டு ரூ.1,29,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, ​​ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ 128ஜிபி சேமிப்பகத்துடன் ரூ.9,901 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.1,19,999க்கு விற்பனையில் உள்ளது. இதை வாங்குபவர்கள் Flipkart Axis Bank கார்டில் ரூ.5995 கேஷ்பேக் பெறலாம். இதன் மூலம் 1,13,905 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, Flipkart உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.37,100 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதன் பொருள் அனைத்து சலுகைகளுடன், ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோவை பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.76805க்கு வாங்கலாம், இது அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஐபோன் 13 விலையை விட ரூ.3095 மலிவானது.  ஆண்ட்ராய்டு போன்களில் Samsung Galaxy S21 FE 5G, Galaxy S22 5G, Motorola Edge 40, Nothing Phone (2), Google Pixel 7a, POCO F5 போன்ற மொபைல்கள் சிறந்த தள்ளுபடிகளை பெற்றுள்ளன.

மேலும் படிக்க | செம அமேசான் ஆப்பர்... ரூ.6000 இயர்பாட் இப்போது ரூ.1000 தான் - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News