சைத்ர அமாவாசை ஏப்ரல் 01 வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளின் நல்வாழ்விற்கும், செல்வத்தைப் பெருக்குவதற்கும் சிறப்பான நாள் இது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது தவிர, இந்நாளில் நீராடி, தானம் செய்வதால், புண்ணியம் கிட்டும்.
பஞ்சாங்கத்தின்படி, சைத்ரா மாதத்தின் அமாவாசை ஏப்ரல் 1ஆம் தேதி வருகிறது. சைத்ரா நவராத்திரி நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
சைத்ர அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் நீராடிய பின் தான தர்மம் செய்வது வழக்கம். அவ்வாறு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இது தவிர, இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம், பித்ரா தோஷம் நிவர்த்தியாகும்.
சைத்ரா அமாவாசை அன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதைத் தவிர, செல்வம் பெருகவும், குழந்தைப் பேறு வாய்க்கவும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
குழந்தை வரம்
மத நம்பிக்கைகளின்படி, சைத்ர அமாவாசை நாளில் முன்னோர்களை மகிழ்விப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் முன்னோர்கள் கோபம் கொண்டால் சாபம் வந்து சேரும் என்ற நம்பிக்கையும் உண்டு. இதனால் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன.
எனவே, முன்னோர்களை மகிழ்விக்க அமாவாசை நாள் உகந்ததாகும். இந்நாளில் முன்னோர்களை மகிழ்விக்க, காலையில் நீராடிவிட்டு, முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
தர்ப்பணத்திற்காக கருப்பு எள்ளை தண்ணீரில் கலக்க வேண்டும். இது தவிர, முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய பிராமணர்களுக்கு பிண்டம், பிராமணர்களுக்கு உணவு, பசு மற்றும் காகத்திற்கு உணவும் கொடுக்கப்படுகிறது.
முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அவர்கள் சந்ததியினருக்கு வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பான வாழ்க்கை கிடைக்கும். எனவே, தனியாக குழந்தை வரம் வேண்டி அமாவசை நாளன்று, அதிலும் சைத்ர அமாவசையன்று எந்த வழிபாடும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் கால சர்ப்ப தோஷம்; சில எளிய அமாவாசை பரிகாரங்கள்!
பொருளாதார செழிப்பு
அமாவாசை திதி பொருளாதார செழிப்புக்கு விசேஷமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சைத்ர அமாவாசையன்று மாலை நேரத்தில் லட்சுமி தேவியை மகிழ்விக்க முடியும். வீட்டின் வடகிழக்கில் விளக்கேற்றவும். நெய் தீபம் ஏற்றுவது சிறப்பானது. இவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதார நிலை மேம்படும் என்பது நம்பிக்கை. செல்வத்தை சேர்த்துக் கொடுக்கும் சைத்ர அமாவசையன்று வீட்டில் ஏற்றும் விளக்கு.
அமாவாசை நாளில், மாவு உருண்டைகள் செய்து, மீன் உட்பட நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவளிப்பது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இதன் மூலம் வாழ்வின் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.
(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் இதனை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புதன் அஸ்தமனத்தால் பாடாய் படப்போகும் இந்த 3 ராசிக்காரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR