டிஏ ஹைக், சமீபத்திய செய்திகள்: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு ஊழியராக இருக்கிறார்களா? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்டேட்டை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) / அகவிலை நிவாரணம் (DR) செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இன்னும் இரு நாட்களில் மற்றொரு முக்கிய அப்டேட் வரவுள்ளது. ஜனவரி 2024 -இல் அமல்படுத்தப்படும் டிஏ குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு பெரிய அப்டேட் வரப் போகிறது. ஆம், ஜூலை மாதத்திற்கான AICPI குறியீடு ஆகஸ்ட் 31 அன்று தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும். அதன் வெளியீட்டிற்குப் பிறகு, அடுத்த, அதாவது ஜனவரியில் கிடைக்கவுள்ள டிஏ உயர்வு (DA Hike) பற்றி யூகிக்க முடியும்.
உயர்த்தப்பட்ட டிஏவின் பலன் ஜூலை 1 முதல் கிடைக்கும்
ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தி அறிவிக்கிறது. முதல் அகவிலைப்படி உயர்வின்படி, ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரியில் அதிகரிக்கப்படுகிறது. இரண்டாவது உயர்வின்படி, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இரண்டு முறையும் அவை இரண்டு முதல் மூன்று மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அரசாங்கம் செப்டம்பரில் DA / DR உயர்வை அறிவித்தால், அது ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும்.
டிஏ 45 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
AICPI குறியீட்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படியின் எண்ணிக்கை 3 புள்ளிகளுக்கு மேல் செல்கிறது. ஆனால் அரசு தசம புள்ளியை கருத்தில் கொள்ளாது என்பதால் இம்முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து, மொத்த அகவிலைப்படி 42 -ல் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த வேண்டும் என ஊழியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. உயர்த்தப்பட்ட கொடுப்பனவு ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு இனி குஷி தான்... அரியர், சம்பள உயர்வை அறிவித்தது மாநில அரசு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் / ஓய்வூதியத்தின் மதிப்பில் பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு நிவாரண நடவடிக்கையாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை வழங்குகிறது. 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த சூத்திரத்தின்படி DA/DR உயர்வு அறிவிக்கப்பட்டுகிறது.
எச்ஆர்ஏ -வில் பம்பர் ஏற்றம் இருக்கும்
ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், டிஏ -வுக்குப் பிறகு எச்ஆர்ஏ அதிகரிக்கும். இருப்பினும், அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும் போது இந்த அதிகரிப்பு ஏற்படும். அதற்கு இன்னும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். தற்போது, நகரங்களின் வகையின் அடிப்படையில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எக்ஸ், ஒய், இசட் என்று பெயரிடப்பட்டுள்ளது. X நகரில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக HRA கிடைக்கும். ஒய் மற்றும் இசட் நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு அவர்களை விட குறைவான HRA கிடைக்கும். நகரத்தைப் பொறுத்து, 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் எச்ஆர்ஏ கிடைக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: வருகிறது டிஏ ஹைக்.. இந்த நாளில் வரும் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ