நம்மிடம் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் பிற பொருட்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை திருடு போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதி பெரிதும் உபயோகமாக உள்ளது எனலாம். வங்கிகள் வழங்கும் லாக்கரில் வாடிக்கையாளர் தாங்கள் விரும்பும் அனைத்து பொருட்களையும் வைத்து கொள்ளலாம். தங்கம், வைரம், ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய பல பொருட்களை வைக்கலாம். சுக்கமாக கூற வேண்டும் என்றால், வங்கி லாக்கர் நமது மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைக்க மிகவும் நம்பகமான இடமாக கருதப்படுகிறது
வங்கி லாக்கர் சாவி தொலைந்து விட்டால் செய்ய வேண்டியது என்ன
வங்கி லாக்கர் சாவி போன்ற முக்கியமான விஷயங்களை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும். அதையும் மீறி, தோ ஒரு காரணத்தினால், தொலைந்து விட்டால் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த சூழ்நிலையை கையாளும் வகையில், வங்கிகள் தெளிவான விதிகள் மற்றும் தீர்வுகளை வழங்குகின்றன.
வங்கிக்கு வழங்க வேண்டிய தகவல்கள்
உங்கள் வங்கி லாக்கர் சாவி தொலைந்துவிட்டால், முதலில் உங்கள் வங்கிக்கு உடனடியாக தகவலைத் தெரிவிக்கவும். வங்கிக் கிளைக்குச் சென்று அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம். இந்த தகவலை வங்கிக்கு வழங்குவது மிகவும் முக்கியம். இதன் மூலம் லாக்கரை தவறாக பயன்படுத்தாமல் பாதுகாக்க முடியும்.
எழுத்துப்பூர்வ புகார் மற்றும் முதல் தகவல் அறிக்கை
வங்கிகள் இழந்த சாவிகள் பற்றிய தகவல்களை எழுத்துப்பூர்வமாக பெற விரும்புகின்றன. லாக்கர் எண், கிளையின் பெயர் மற்றும் தேவையான பிற தகவல்களைக் கொண்ட எழுத்துப்பூர்வ புகாரை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன், காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட வேண்டும். பிறகு அதன் நகலை வங்கியில் கொடுக்க வேண்டும்.
புதிய சாவியை உருவாக்குவதற்கான செயல்முறை
லாக்கர் சாவியை தொலைந்து போன நிலையில், புதிய சாவியை உருவாக்க அல்லது லாக்கரைத் திறக்க வங்கிகள் நிபுணர்களின் உதவியைப் பெறுகின்றன. இதில் லாக்கர் பாதுகாப்பாக உடைக்கப்பட்டு புதிய சாவி வழங்கப்படுகிறது. இந்த செயல்முறை உங்களுக்கு முன்னால் நடக்கும் இதனால் வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Reliance Jio: ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டா... ஒரு வருடத்திற்கு ரூ. 601 மட்டுமே
லாக்கரை உடைப்பதற்கான செலவு
லாக்கர் சாவியை இழந்த பிறகு, அதை பழுதுபார்க்கும் அல்லது லாக்கரை உடைப்பதற்கான செலவை வாடிக்கையாளர் தான் ஏற்க வேண்டும். வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில், சாவி தொலைந்து விட்டால், முழுப் பொறுப்பும் வாடிக்கையாளரே என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே சாவியை பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள். தேவையில்லாமல் மற்றவர்களிடன் அதனை கொடுக்க வேண்டாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் வங்கி லாக்கர் சாவியை தொலைத்துவிட்டால், பீதி அடைவதற்குப் பதிலாக, உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு, அவர்கள் கொடுத்துள்ள நடைமுறையைப் பின்பற்றவும். இது உங்கள் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் விழிப்புணர்வு மட்டுமே உங்கள் மதிப்புமிக்க பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
மேலும் படிக்க | முடங்கிய இன்ஸ்டாகிராம்... தவிச்சு போன இளசுகள் - இந்த வாரத்தில் இது 2வது முறை...!!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ