ஆடிப்பெருக்கு 2020: வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்

ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு இனிய நாளாக இருக்கிறது.

Last Updated : Aug 2, 2020, 09:45 AM IST
ஆடிப்பெருக்கு 2020: வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள் title=

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்கு  ஆகும். 

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.

 

ALSO READ | ஆடிப்பெருக்கு விழா! சுவாரசிய விவரம் உள்ளே!!

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

மாங்கல்ய பலம் நீடிக்கவும், புதிதாக விதை விதைப்பதால் விவசாயம் செழித்து தை மாதத்தில் நல்லபடியாக அறுவடை செய்யவும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வந்தனர். இன்றைய நாளில் எதை நாம் பல்கிப் பெருக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பார்கள்.

 

ALSO READ | ஏன் ஆடி பதினெட்டு முக்கியம்?- படிக்க!!

ஆடி பதினெட்டாம் நாள் தாலிக்கயிறு மாற்றுவதற்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்பட்டு வருகிறது. புதிதாக தாலி கயிறு மாற்ற விரும்புபவர்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்வது மாங்கல்ய பலத்தை தரும்.

Trending News