Aadhaar Card Update: நம் நாட்டில் இப்போது அடையாள ஆதாரம் மற்றும் குடியிருப்பு ஆதாரமாக ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. உங்கள் ஆதார் அட்டை எப்போதும் புதுப்பிக்கப்படுவது முக்கியமான விஷயமாகும். இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் மொபைல் எண்ணை ஆதாரில் பதிவு செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையில் இதுவரை பதிவு செய்யவில்லை என்றால், நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இந்த வேலைகள் நடக்காமல் போகலாம்
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆதார் அட்டையில் (Aadhaar Card) இல்லை என்றால், நீங்கள் ஆதார் எண்ணை வெரிஃபை செய்ய அதாவது சரிபார்க்க முடியாது. இது தவிர, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலையும் வெரிஃபை செய்ய முடியாது. ஆதார் அமைப்பான UIDAI , மக்களுக்கு மெய்நிகர் ஐடி-களை உருவாக்கும் வசதியையும் வழங்கியுள்ளது. உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், இந்த வசதியையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மேலும், ஆதார் (Aadhaar) காகிதமில்லாத ஆஃப்லைன் e-KYC-சியும் சாத்தியமில்லை. இது தவிர, உங்கள் பயோமெட்ரிக்ஸை நீங்கள் லாக் செய்யவோ அன்லாக் செய்யவோ முடியாது.
உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்:
Step 1: ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு மையத்திற்குச் செல்லவும்
Step 2: ஆதார் திருத்தும் படிவத்தை நிரப்பவும்
Step 3: ஆதாரில் புதுப்பிக்கப்பட வேண்டிய உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை உள்ளிடவும்
Step 4: படிவத்தை சமர்ப்பித்து, உங்கள் பயோமெட்ரிக்ஸை ஆதாரமாகக் கொடுக்கவும்
Step 5: ஆதார் ஊழியர்கள் இது குறித்த ஒப்புதல் சீட்டை உங்களுக்கு வழங்குவார்கள்
Step 6: சீட்டில் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) இருக்கும்
Step 7: ஆதார் புதுப்பித்தல் நிலையைக் கண்காணிக்க இந்த யுஆர்என் எண்ணை பயன்படுத்தலாம்
Step 8: ஆதாரில் மொபைல் எண்ணைப் புதுப்பித்த பிறகு, நீங்கள் மற்றொரு ஆதார் அட்டையைப் பெறத் தேவையில்லை
Step 9: உங்கள் மொபைல் எண் ஆதார் உடன் பதிவு செய்யப்பட்டதும், பலவித வசதிகளின் நன்மைகளைப் பெற OTP-ஐப் பெறத் தொடங்குவீர்கள்.
Step 10: UIDAI இன் கட்டணமில்லா எண் 1947-ஐ அழைத்தும் ஆதார் புதுப்பிப்பு நிலையைப் பற்றிய தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை பதிவு செய்துகொள்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மாறாக, நமது மொபைல் எண் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்படாமல் இருந்தால், பல வசதிகளையும் சலுகைகளையும் நாம் பெற முடியாமல் போகலாம்.
ALSO READ: Aadhaar Card-ல் எத்தனை முறை உங்கள் பெயரை மாற்ற முடியும் தெரியுமா?
ALSO READ: Budget 2021: Good news காத்திருக்கிறது, வரிவிலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR