நாளை ஜி 20 உச்சிமாநாடு! இன்று முதல் பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி

G20 Summit Security: இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு நாளை தலைநகர் புதுடெல்லியில் துவங்க உள்ள நிலையில், இன்று முதல் பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி வந்துவிட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2023, 09:48 AM IST
  • புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியானது
  • பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி
  • செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை பாதுகாப்பு கட்டுப்பாடுகள்
நாளை ஜி 20 உச்சிமாநாடு! இன்று முதல் பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி title=

புதுடெல்லி: செப்.9 மற்றும் 10 ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள 2023 G20 உச்சிமாநாடு, பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது. இது G20 உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஜி20  உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது.

G20 குழுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நாடுகள் உள்ளன.

2021 ஜி-20 ரோம் உச்சி மாநாட்டின் முடிவில் இம்மாநாட்டின் தலைமைப் பதவி 1 டிசம்பர் 2021 அன்று இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியிடமிருந்து, இந்தோனேசியாவின் அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நாள முதல் தொடங்குகிறது.

இதற்காக சர்வதேச தலைவர்கள் பலர் டெல்லிக்கு வர உள்ளனர். தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது. 

டெல்லி மற்றும் உத்தர பிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கே சர்வதேச தலைவர்கள் வருகைக்காக சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் டெல்லியில் மொத்தமாக பாதுகாப்பு மாற்றப்பட்டு உள்ளது. நகரத்திற்கு உள்ளே பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ட்ரான்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | G-20 அழைப்பில் பாரத குடியரசுத்தலைவர்... எதிர்கட்சியினர் கண்டனம்!

ஒரு சிறிய அளவிலான ஆயுத கிடங்கும் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கமாண்டோ படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். அதுபோல துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் மருத்துவ முதலுதவிக்கு தேவையான மருந்துகளும் அக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது தலைவர்கள் தங்கக்கூடிய நட்சத்திர விடுதிகளின் மாடியில் ட்ரோன்களை கண்காணிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

சில ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது. அதேபோல ரைடுகள் புறப்படும் இடமும் அதே போல வெளியூர்களில் இருந்து டெல்லிக்கு வந்து சேரக்கூடிய ரயில்களின் இறுதி நிறுத்தமும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டு இருக்கிறது

புது டெல்லி காவல்துறையின் ரெயில்வே காவல் பிரிவு, மத்திய ரெயில்வே காவல்துறையுடன் இணைந்து டெல்லி ரெயில்வே நிலையம் அருகே ரோந்து பணிகளை மேற்கொண்டது. பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | G-20: வெளிநாடு விருந்தினர்களுக்கு ₹ 18 கோடி வாடகையில் 20 லிமோசின் கார்கள்!

புது டெல்லியின் மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை அனைவருக்குமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு, (G-20 Summit) செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், அவசரகால வாகனங்கள், மற்றும் விமான நிலையம், பழைய டெல்லி ரெயில்வே நிலையம் மற்றும் புது டெல்லி ரெயில்வே நிலையம் செல்லும் வாகனங்கள் ஆகியவை மட்டுமே அடையாளங்கள் உறுதியான பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்.

செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 10-ம் தேதி வரை புது டெல்லியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறக்கூடிய ஜி 20 மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வந்து அடைகிறார். அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் பாதிப்பு இருக்கலாம் என்றும், அதனால் அவர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று அஞ்சப்பட்டது.

அமெரிக்க அதிபருக்கு, இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதால், அவர் தற்போது அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கான பயணத்தை தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க | G20 Summit: செப்டம்பர் 9 -10 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News