புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தனது நாணயக் கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில் வங்கி, முக்கிய கொள்கை விகிதங்களை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது. இதன் விளைவாக, வீடு மற்றும் வாகனக் கடன் வாங்கியுள்ளவர்கள் தற்போதுள்ள விகிதங்களிலேயே இஎம்ஐகளைத் தொடர வேண்டும். இந்த விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்த கொள்கை மதிப்பாய்வு 2022 பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஒன்பது நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. இதுவே 2021-22 நிதியாண்டின் கடைசி நாணயக் கொள்கை மதிப்பாய்வு என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 10, அதாவது இன்று தனது நாணயக் கொள்கை விகிதங்களின் முடிவுகளை அறிவித்த ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 3.35 சதவீதமாகவும் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியது.
வணிக வங்கிகளுக்கு தேவைபப்டும்போது ரிசர்வ் வங்கி கடன் அளிக்கும். அந்த கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம்தான் ரெப்போ விகிதம் எனப்படுகின்றது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவியாகும் இது. ரிவர்ஸ் ரெப்போ வீதம் என்பது ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் வீதமாகும்.
ரெப்போ என்பது வணிக வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவி இது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதமாகும்.
மேலும் படிக்க | உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று துவக்கம்
எம்.பி.சி தனது கடைசி ஒன்பது மதிப்பாய்வுகளில் முக்கிய பெஞ்ச்மார்க் விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. இப்போது, தொடர்ந்து பத்தாவது முறையாக பாலிசி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க எம்.பி.சி முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி தனது கொள்கை விகிதத்தை கடைசியாக மே 22, 2020 அன்று, ஒரு ஆஃப் பாலிசி சுழற்சியில் மாற்றியது. அப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன.
6 உறுப்பினர்களைக் கொண்ட எம்.பி.சி-யில், வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதற்கு ஏகமனதாக வாக்களிக்கப்பட்டது. மேலும், வளர்ச்சியை ஆதரிக்கவும், பணவீக்கத்தை இலக்குக்குள் வைத்திருக்கவும் தேவைப்படும் வரை அதன் இணக்கமான நிலைப்பாட்டை தொடர முடிவு செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு, இருமாத கொள்கை மறுஆய்வு குறித்த விவாதங்களை செவ்வாயன்று தொடங்கியது. இந்த சந்திப்பு முதலில் பிப்ரவரி 7-9 தேதிகளில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டது. எனினும் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 7 ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்ததையடுத்து, இது பிப்ரவரி 8-10 தேதிக்கு மாற்றப்பட்டது.
மேலும் படிக்க | Beware: க்ரிப்டோ கரன்சியை இந்தியா அங்கீகரித்துவிட்டதா? 30% ஹேஷ்டேக் பின்னணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR