லக்னோ: பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுக்கு ஆளானவரும், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் அரசில் அமைச்சராக பதவி வகித்தவருமான காயத்ரி பிரஜாபதியை கைது செய்தனர்.
சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான காயத்ரி பிரஜாபதி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிப்ரவரி 27-ம் தேதி முதல் இவர் தலைமறைவாக இருந்து வந்தார். உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றியை கொண்டாட இவர் வரவில்லை.
இதனிடையே, தலைமறைவாகியுள்ள காயத்ரி பிரஜாபதி எங்கு இருக்கிறார் என்பதை அறிவதற்காக அவரது 2 மகன்கள் மற்றும் சகோதரரின் மகன் ஆகியோரிடம் போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று லக்னோவில் காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜாபதி விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவ்வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.