பிரதமர் நரேந்திர மோடி இன்று, பிப்ரவரி 24 திங்கள்கிழமை பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 19வது தவணையை (PM Kisan 19th Installment) விடுவிக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா என்றால் என்ன?
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) என்பது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசால் நடத்தப்படும் மிகப்பெரிய அளவிலான திட்டங்களில் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக மத்திய அரசால் (Central Government) கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதி உதவித்திட்டம் என தமிழில் கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டம்
விவசாயிகள் கௌரவ நிதி உதவித்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மூன்று சம தவணைகளாக வரவு வைக்கப்படுகிறது. அதாவது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 அனுப்பப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டமாக மாறியுள்ளது.
திட்டத்தில் எத்தனை விவசாயிகள் பலன் பெறுவார்கள்?
கடந்த முறை இத்திட்டத்தின் மூலம் 9.6 கோடி விவசாயிகள் பயன் பெற்றனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9.8 கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயிகளின் கணக்குகளுக்கு இதுவரை 3.86 லட்சம் கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.
PM கிசான் பயனாளிகளின் பட்டியலில் (PM Kisan Beneficiary List) உங்கள் பெயர் உள்ளதா என்பதை எவ்வாறு சரி பார்ப்பது?
1. PM-KISAN (https://www.pmkisan.gov.in) அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும்.
2. ‘Beneficiary List’ டேப்பில் கிளிக் செய்யவும்.
3. உங்கள் மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத் தகவல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
4. 'Get Report' பட்டனை அழுத்தவும்.
5. பயனாளிகளின் பட்டியல் திரையில் தோன்றும்.
சிக்கல் இருந்தால் தொடர்பு கொள்ளும் முறை
நீங்கள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், இந்த ஹெல்ப்லைன் எண்களான 155261 மற்றும் 011-24300606 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலம் பாகல்பூரில் பிப்ரவரி 24 திங்கள்கிழமை ஒரு பெரிய பேரணியை நடத்த உள்ளார். அப்போது பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 19வது தவணையை (PM Kisan 19th Installment) விடுவிப்பார் என கூறப்படுகிறது. பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் விவசாயிகளுக்கு முக்கியமான கல்வி நிறுவனமான சபோர் வேளாண் பல்கலைக்கழகம் இங்கு அமைந்திருப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு பாகல்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது தவிர, இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியின் மூலம், பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவசாயிகள் மத்தியில் சாதகமான செய்தியை வழங்க பிரதமர் விரும்புகிறார்.
பகல்பூர், பாங்கா, முங்கர் மற்றும் லக்கிசராய் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி அறிவிப்பார்.
மேலும் படிக்க | ஓய்வு காலத்தில் ஹேப்பியாக இருக்க... இந்த 4 திட்டங்கள் கைக்கொடுக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ