ஓய்வு காலத்தில் ஹேப்பியாக இருக்க... இந்த 4 திட்டங்கள் கைக்கொடுக்கும்!

Retirement Planning: ஓய்வுகாலத்தில் உங்களுக்கு மாதாமாதம் பென்ஷன் கொடுக்கும், பெரும் உதவியாக இருக்கும் இந்த 4 திட்டங்களை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

தனியார் ஊழியர்கள் ஓய்வுக்கு பிறகு சிறப்பான வாழ்க்கையை வாழ, உட்கார்ந்த இடத்தில் இருந்த மாதந்தோறும் வருமானம் வர நீங்கள் பணியாற்றும் காலத்திலேயே சில திட்டங்களில் இணைய வேண்டும். ஓய்வூதிய திட்டம் என்பது நீங்கள் பணியாற்றும் காலகட்டத்தில் சிறுக சிறுக சேமிக்கும் தொகையாகும். இது ஓய்வு காலத்தில் உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் பெரும் உதவியாய் இருக்கும்.

 
1 /8

தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme): இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஓய்வூதிய மொத்த நிதி மற்றும் மாத வருமானமும் கிடைக்கும். இது பங்குச்சந்தையுடன் இணைந்து திட்டம் ஆகும். எனவே, இதனை நீங்கள் நீண்டகாலம் முதலீடு செய்யும் போது தான் அதிக வருமானம் கிடைக்கும் ஆண்டுக்கு சராசரியாக 10% வருவாய் கிடைக்கும். இந்திய குடிமகன்கள் 18 வயதில் இருந்து 75 வயது இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

2 /8

இதில் நீங்கள் ஓய்வு பெறும் போது தொகையில் 60% உங்களுக்கு ஓய்வூதிய நிதியாகவும், 40 சதவீதம் வருடாந்திரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓய்வூதியம் இப்படியே வழங்கப்படும். வருடாந்திர தொகை அதிகமாக இருந்தால், உங்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

3 /8

தபால் நிலைய மாத வருமானம் திட்டம் (Post Office Monthly Income Scheme): உங்களுக்கு ஓய்வு காலத்தில் மாதந்தோறும் வருமானத்தை அளிக்கும். இது அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட டெபாசிட் திட்டமாகும். இதில் நீங்கள் வட்டியின் மூலம் வருமானத்தை பெறுவீர்கள். இதில் நீங்கள் தனியாகவும் கணக்கு வைத்து இருக்கலாம் அல்லது கூட்டுக் கணக்கையும் வைத்திருக்கலாம்.

4 /8

அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கூட்டு கணக்கு என்றால் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலகட்டத்திற்கு இந்த தொகை டெபாசிட் செய்ய வேண்டும். தற்போது இந்த திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்க, கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 9,250 வட்டி வருமானமாக கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

5 /8

அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana): இந்த திட்டத்தில் வரி செலுத்தாத அனைவரும் இதில் பயனாளராக சேரலாம். 18 வயதில் இருந்து 40 வயது வரை இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம்.

6 /8

இந்த திட்டத்தில் மாதம் உங்களால் முடிந்த தொகையை இதில் முதலீடு செய்யலாம் நீங்கள் செலுத்திய தொகையை மாதாமாதம் 10 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பென்ஷனாக எடுத்துக் கொள்ளலாம். வயதான காலத்தில் நீங்கள் பென்ஷனாக பெற விரும்பும் அளவைப் பொறுத்து உங்கள் பங்களிப்பின் அளவு தீர்மானிக்கப்படும்.

7 /8

பணியாளர் ஓய்வூதிய திட்டம் (Employee Pension Scheme): தனியார் துறையில் வேலை பார்ப்பவர் அனைவரும் EPF திட்டத்தில் இணைந்திருப்பீர்கள். இந்த திட்டத்தில் பணியாளராக நீங்களும், உங்களின் முதலாளியும் பங்களிப்பு செய்வீர்கள். இதில் ஒரு பகுதி பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) கீழ் வரவு வைக்கப்படும்.

8 /8

EPS மூலம் நீங்கள் ஓய்வு காலத்தில் மாதாமாதம் பென்ஷன் பெறலாம். நீங்கள் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு, EPS-இல் பங்களிப்பு செய்திருந்தால் நீங்கள் பென்ஷனை பெரும் தகுதியை பெறுவீர்கள். மேலும் நீங்கள் ஓய்வு பெற்ற பின்னரே பென்ஷன் பெற முடியும். நீங்கள் மாதந்தோறும் பெரும் பென்ஷனின் அளவு உங்களின் மொத்த பங்களிப்பை பொறுத்து அமையும்.