சந்தை விலையை விட மிக குறைவான விலையில் மின்னணு பொருட்களை விற்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது!
ராஜஸ்தான் மாநில அரசு மற்றம் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் கூட்டமைப்பு (CONFED) இணைந்து, மின்னணு பொருட்களை சந்தை விலையை காட்டிலும் மிககுறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக சிறப்பு 5 அங்காடிகளை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முதற்படியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐந்து மல்டி பிராண்டு அங்காடிகளை அரசு திறக்கின்றது. இந்த அங்காடிகளை மாநில முதல்வர் அசோக் கெலோட் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த அங்காடிகளை முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த அங்காடிகளை தற்போதைய முதல்வர் அசோக் கெலோட் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரின் நுவரு சாலையில் முதல் மல்டி பிராண்ட் அங்காடி திறக்கப்படும் எனவும், இதனை தொடர்ந்து கோபல்பூரா, நிர்மான் நகர், மன்சாரோவாரில் திறக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பல்பொருள் அங்காடிகளிங் வீடு உபயோக சாதனங்களை உள்ளடக்கிய அனைத்து வித மின்னணு பொருட்களும் சந்தையை விட மிக மலிவான விலையில் விற்கப்படும். நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் கூட்டமைப்பு நீண்ட காலமாக இவ்வாறான விற்பனைகளை முகாம்களின் மூலம் நடத்தி வந்தாலும், இந்த முகாம்களில் விற்கப்படும் பொருட்களை காட்டிலும் இந்த அங்காடிகளில் பொருட்களின் விலை மிக மளிவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் கூட்டமைப்பு தலைவர் ராய்சிங் மோஜ்வாத் இதுகுறித்து தெரிவிக்கையில்., ராஜஸ்தானில் முதன்முறையாக இந்த பல்பொருள் அங்காடி திறக்கப்படுகிறது. இது பொதுமக்களின் தேவைகளை மளிவு விலையில் பூர்த்தி செய்யும். இந்த அங்காடிகளில் சாம்சங், மைக்ரோமேஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிதுள்ளார்.