மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்... உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

President Rule In Manipur: மணிப்பூரில் தற்போதுள்ள பாஜக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 13, 2025, 08:49 PM IST
  • மணிப்பூரில் 2023 மே மாதம் வன்முறை வெடித்தது.
  • தற்போது வரை அங்கு அமைதி நிலைநாட்டப்படவில்லை.
  • சமீபத்தில் முதல்வராக இருந்த பைரன் சிங் பதவி விலகினார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்... உள்துறை அமைச்சகம் அறிவிப்பு title=

President Rule In Manipur: மணிப்பூரில் தற்போதுள்ள பாஜக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்தில், மணிப்பூர் முதல்வராக இருந்த பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதற்கு பின் வேறு நபரை முதல்வராக அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த கெடு முடிவடைந்தது, பாஜகவும் யாரையும் முதல்வராக அறிவிக்கவில்லை. இதையொட்டி, மணிப்பூர் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 1951ஆம் ஆண்டில் இருந்து 11வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் மாநில ஆளுநரிடம் இருந்து, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து அறிக்கையை பெற்ற பின்னர், அந்த அறிக்கை மற்றும் தனக்குக் கிடைத்த பிற தகவல்களைப் பரிசீலித்த பிறகு, அந்த மாநில அரசாங்கத்தை இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ததாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், அதற்காக தனக்கு உதவும் மற்ற அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சியை மணிப்பூரில் அமல்படுத்துவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர் பைரன் சிங், மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். குறிப்பாக வன்முறை தூண்டும் வகையில் பைரன் சிங் பேசிய சில ஆடியோக்கள் வெளியாகி மிகவும் பரபரப்பை உண்டாகிய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையிலும் உள்ளது. ஆடியோக்களை ஆய்வு செய்து மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திடம் இருந்து உச்ச நீதிமன்றம் அறிக்கையை கோரி, வரும் மார்ச் 24ஆம் தேதிக்கு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

இதையொட்டி, மணிப்பூர் சட்டப்பேரவை பிப்.10ஆம் தேதி கூட இருந்த நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர இருப்பதாக தெரிவித்தது. இதையொட்டியே பைரன் சிங், முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா செய்தது ஏன்?

மேலும் படிக்க | ஷாக் கொடுத்த நிதிஷ் குமார் - திடீர் ஆதரவு வாபஸ்... பாஜகவுக்கு எச்சரிக்கை மணியா...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News