P Chidambaram, Congress: அனைத்து சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் அரசால் தீர்க்க முடியாது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்த கருத்து பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய அவர், நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க தனது கட்சியிடம் (காங்கிரஸ்) உறுதியான திட்டம் உள்ளது எனக் கூறியுள்ளார்.
அனைத்து சமூக, பொருளாதார பிரச்னைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனந்த நாகேஸ்வரன் நேற்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தனது X தளப் பதிவில், "மிகவும் திடுக்கிடும் வாக்குமூலத்தை தலைமைப் பொருளாதார ஆலோசகர் அளித்துள்ளார். 'வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசால் தீர்க்க முடியாது' என்று அவர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. பாஜக அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அதுவாக இருந்தால்,, இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. எனவே 'உங்கள் இடத்தை காலி செய்யுங்கள்' என்று பாஜகவிடம் தைரியமாகச் சொல்ல வேண்டும்" எனத் தனது பதிவில் கூறியுள்ளார்.
மேலும் "வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காங்கிரஸ் ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் தேர்தல் அறிக்கையில் அதுக் குறித்து தெளிவாக கூறப்பட்டு உள்ளது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்
இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பா ஜ க அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது
பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில்…
— P. Chidambaram (@PChidambaram_IN) March 27, 2024
நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளில் மோடி அரசை காங்கிரஸ் தொடர்ந்து தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ