உத்திரிபிரதேச மாநிலம் நோய்டாவில் இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து சுமார் 1 கோடி வரை ஏமாற்றிய ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்!
உத்திரபிரதேச மாநிலம் செக்டார் 73 பகுதியை சேர்ந்தவர் ராகுல் சோம்லா. இவர் கடந்த 8 ஆண்டுகளாக இரு வேறு பெண்களுடன் குடும்பம் நடத்தி, இருவரிடமும் சுமார் 1 கோடி வரை ஏமாற்றிய பிடுங்கியுள்ளாதாக கைது செய்யப்படுள்ளார். இவரை கைது செய்த காவல்துறையினருக்கு ராகுல் மிகவும் பரிட்சையமானவர் தான்., சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி இன்றும் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக இவர் மீது மேலும் ஒரு புகார் தற்போது பதிவாகியுள்ளது.
9 ஆண்டுகள் முன்னதாக சண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ 50 லட்சம் வாங்கியுள்ளார், பின்னர் தொழில் துவங்க பண உதவி வேண்டும் என 37 லட்சம் வரை வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை இந்த பணத்தை இவர் என்ன செய்தார் என இவரது முதல் மனைவிக்கு தெரியவில்லை.
இதற்கிடையில் கடந்த 2011-ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநிலம் கைசாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவரிடம் இருந்து கனிசமான தொகையினை சுருட்டியுள்ளார். ஆனால் இதுநாள் வரையில் இவரது இரு மனைவிகளுக்கும் மற்றொரு மனைவி குறித்து ராகுல் தெரிவிக்க வில்லை.
சமீபத்தில் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரரின் திருமண நிகழ்ச்சிக்கு இரு மனைவிகளையும் அழைத்து வந்த ராகுல், நிகழ்ச்சியிலும் இருவரையும் ஒருவருக்கொருவர் அறியாத வகையில் பங்கேற்க வைத்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் மனைவியுடன் முதல் மூன்று நாள் தங்கிய ராகும், இரண்டவது மனைவியுடன் அடுத்த நான்கு நாட்கள் தங்கியுள்ளார். என்றபோதிலும் இரு மனைவிகளுக்கும் ராகுல் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. இதன் காரணமாக இரு மனைவிகளுடனும் இரு குழந்தைகள் பெற்றுள்ள ராகுல் இரு குடும்பங்களையும் பிரச்சனைகள் ஏதும் இன்றி 8 ஆண்டுகள் சமாளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது முதல் மனைவின் நகைகளை பினை வைத்து கனிசமான தொகையை ராகுல் திரட்ட முயற்சிக்கையில் இரண்டாம் மனைவியிடம் சிக்கியுள்ளார். இதனையடுத்து இரு மனைவிகளை ஏமாற்றிய விவகாரம் குறித்து காவல்துறையில் இரு மனைவியரும் புகார் அளித்துள்ளனர். இவர்களின் புகாரின் பேரில் ராகுலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.