கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிதிபதிகள் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்!
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், நீதிபதி உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. காலியிடங்கள் நிரப்பப்படாம் இருப்பதால் ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன.
இதனால் காலியிடங்களை நிரப்பும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அந்தவகையில், டெல்லி, கொல்கத்தா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டது.
இதனையடுத்து இன்று கேரளா, கர்நாடக, மேகாலயா, மணிபூர், திரிபுரா ஆகிய 5 இடங்களுக்கான உயர்நீதிமன்று நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்!
- இதன்படி மேகாளயா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தினேஷ் மஹேஷ்வரி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் பிப்., 20 முதல் பதவியேற்பார்.
- கேரளா உயர்நீதிமன்ற பொருப்பு தலைமை நீதிபதியாக இருந்த அந்தோனி டோமினிக், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.
- ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த அஜய் ரஸோட்ஜி, திரிபுரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.
- அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தருன் அகர்வால், மேகாளயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.
- குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபிலாஸ் குமாரி, மணிபூர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் குழுவான கொலீஜியம் இந்த பரிந்துரையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.