Replace India With Bharat: இனி பள்ளிப் புத்தகங்களில் இந்தியாவுக்குப் பதிலாக “பாரத்” ? NCERT பரிந்துரை

Replacing India With Bharat: இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பள்ளிப் புத்தகங்களில் பாரத் என்று சொல்லிக் கொடுக்கலாம். அதை மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவுக்குப் பதிலாக பாரத் என்று பெயரிடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 25, 2023, 03:36 PM IST
  • பள்ளி பாடப்புத்தகங்களில் "இந்தியா" என்பதை "பாரத்" என்று மாற்ற பரிந்துரை.
  • 'பண்டைய வரலாறு' என்பதற்குப் பதிலாக, 'செம்மொழி வரலாறு' சேர்க்க வேண்டும் என பரிந்துரை
  • அரசியலமைப்பின் 1ஆவது பிரிவைத் திருத்துவதற்கான மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.
Replace India With Bharat: இனி பள்ளிப் புத்தகங்களில் இந்தியாவுக்குப் பதிலாக “பாரத்” ? NCERT பரிந்துரை title=

புது டெல்லி: NCERT குழு அனைத்து பள்ளி பாடப்புத்தகங்களிலும் "இந்தியா" என்பதை "பாரத்" என்று மாற்ற பரிந்துரைத்துள்ளது. இன்று (புதன்கிழமை) இந்தத் தகவலை அளித்த NCERT குழுத் தலைவர் சிஐ ஐசக், அனைத்துப் பாடங்களின் பாடத்திட்டத்திலும் அறிமுகப்படுத்த இந்திய அறிவு முறை (Indian Knowledge Systems) அமைப்பிடம் என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது என்றார். இது தவிர, பாடப்புத்தகங்களில் 'பண்டைய வரலாறு' என்பதற்குப் பதிலாக, 'செம்மொழி வரலாறு' சேர்க்க வேண்டும் என்றும் என்சிஇஆர்டி குழு பரிந்துரைத்துள்ளது.

என்சிஇஆர்டி புத்தகங்களில் இனி “பாரத்”

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (NCERT) பரிந்துரையான இந்தியாவிற்குப் பதிலாக 'பாரத்' என்று அச்சிடப்பட்ட புத்தகங்களை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கையை அதன் உறுப்பினர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. என்சிஇஆர்டி குழு உறுப்பினர்களில் ஒருவரான சிஐ ஐசக் கூறுகையில், புதிய என்சிஇஆர்டி புத்தகங்களில் பெயர் மாற்றம் இருக்கும். இந்த முன்மொழிவு சில மாதங்களுக்கு முன்பு முன்வைக்கப்பட்டு இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு என்று கூறினார்.

"இந்திய ஜனாதிபதி" Vs "பாரத் ஜனாதிபதி" 

நமது நாட்டின் பெயர் 'பாரத்' என மாற்றம் செய்யப்படுமா என்ற விவாதத்தின் பின்னணியில் என்சிஇஆர்டி  குழுவின் பரிந்துரையும் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு ஜி20 மாநாட்டு (G20 Summit) ஜனாதிபதி திரவுபதி முர்முவின் விருந்து அழைப்பிதழில் "இந்திய ஜனாதிபதி" என்பதற்குப் பதிலாக "பாரத் ஜனாதிபதி" என்ற பெயரில் அச்சிடப்பட்டு அனுப்பியது. இது பெரும் சர்ச்சையைத் தூண்டியது. மேலும் நாட்டின் பெயரையே மாற்ற மோடி தலைமையிலான பாஜ அரசு திட்டமிட்டு உள்ளதா என எதிர்க்கட்சிகள் கிலேவி எழுப்பினர். அதன் பின்னர் இந்த விவகாரம் அரசியல் சந்தையாக மாறியது.

மேலும் படிக்க - இந்தியா - பாரத் சர்ச்சை ஒரு பக்கம்! பாரம்பரிய பேரை மாற்றிக் கொண்ட நாடுகளின் வரலாறு

பிரதமர் நரேந்திர மோடி மேசையில் 'பாரத்' பலகை

செப்டம்பரில், டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, அவரின் மேசையில் 'பாரத்' என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A. பெயர் சூட்டப்பட்டது

அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் 28 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிக்கு 'INDIA' என பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னரே, மத்திய பாஜக அரசு இந்தியா என்ற சொல்லுக்கு மாற்றாக பாரத் என்ற சொல்லை பிரதானப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க - INDIA vs BHARAT: இந்தியா பெயரை கேட்டாலே அதிரும் பாஜக - ஸ்டாலின்

'பாரத்' பெயர் மாற்றம் சாத்தியமா? 

அதுமட்டுமின்றி, இந்தியா என்பது சர்வதேச அளவில் அழைக்கப்பட்டு வரும் சூழலில் அதனை 'பாரத்' என மாற்றுவது தற்போது அவசியமில்லாத ஒன்று எனவும் இது பல்வேறு குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா Vs பாரத்: அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1-இல், "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 1 'இந்தியா' மற்றும் 'பாரத்' இரண்டையும் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர்களாக அங்கீகரிக்கிறது என்பது நினைவில் கொள்ள முக்கியமானதாகும்.

நாட்டின் பெயரை மாற்ற 66 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை 

'பாரத்' என்பதை மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பெயராக மாற்ற அரசாங்கம் முடிவு செய்தால், அவர்கள் அரசியலமைப்பின் 1ஆவது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க - இந்தியாவை பாரத் என பெயர் மாற்ற முடியுமா... அரசியலமைப்பு சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News