நாட்டையே உலுக்கியுள்ள கேரளாவின், திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை உள்துறை அமைச்சகம் (MHA) வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) வசம் ஒப்படைத்தது.
இந்த வழக்கில் மத்திய ஏஜென்சிகளின் விசாரணை தேவை என கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது. முதல்வர் விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியதைத் தொடர்ந்து இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
READ | அடுத்த ஒரு வருடத்திற்கு மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் - அரசு அதிரடி உத்தரவு..!
ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதால் இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA)-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, என உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக பொது அலுவலகத்தின் விலாசம் குறிக்கப்பட்ட ஒரு பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக துப்பு கிடைத்ததை அடுத்து சர்வதேச விமான நிலையத்தில் சுங்க துறை அதிகாரிகள் குற்றச்செயலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரக அலுவலகத்தின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்துவதற்காக தூதரக அதிகாரிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்த தூதரக ஆவணங்களை அவர் உருவாக்கியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக குறிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கேரளா அரசாங்கத்துடன் குற்றச்செயலில் ஈடுப்பட்ட மற்றொரு நபரான சுரேஷுக்கு தொடர்புகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள், ஆளும் கட்சி உதவியுடனே இந்த செயல் நடைப்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
READ | கேரள தங்கக் கடத்தல்: IAS அதிகாரி M. சிவசங்கர் IT செயலர் பதவியில் இருந்து நீக்கம்...
மேலும் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஸ்வப்னா குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய ஏஜென்சிகளின் விசாரணை தேவை என கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சரித்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.