ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு... FD திட்டத்தின் வருவாயும் குறையும் - அடுத்து என்ன பண்ணலாம்?

FD Interest Rate: ரெப்போ வட்டியை குறைத்து ஆர்பிஐ அறிவத்துள்ளதால், வங்கிகளின் FD திட்டங்களின் வட்டி விகிதமும் குறையும். இதனால், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 7, 2025, 02:21 PM IST
  • FD திட்டம் பலரின் நம்பிக்கையான முதலீடுகளில் ஒன்றாகும்.
  • தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
  • வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பதற்குள் அதில் முதலீடு செய்யவும்.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு... FD திட்டத்தின் வருவாயும் குறையும் - அடுத்து என்ன பண்ணலாம்? title=

FD Interest Rate: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதி கொள்கைக் குழு கூட்டம் கடந்த பிப். 4ஆம் தேதி தொடங்கி, இன்று நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை அடுத்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து (RBI Repo Rate Cut) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கிகள், மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம்தான் இந்த ரெப்போ வட்டியாகும். இந்த ரெப்போ வட்டி 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நீங்கள் வங்கிகளிடம் இருந்து பெற்ற கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவற்றின் மாதாந்திர தவணை தொகை (EMI) குறையும். இது மகிழ்ச்சியானது என்றாலும் வங்கியில் வழங்கப்படும் நிலையான டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதமும் குறையும், இது முதலீட்டாளர்களுக்கு பின்னடைவை அளிக்கும் எனலாம்.

FD முதலீட்டாளர்களுக்கு பின்னடைவு

பெரும்பாலும் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் மூத்த குடிமக்களே அதிகமாக முதலீடு செய்திருப்பார்கள். காரணம், மற்ற வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் FD திட்டங்களில் அதிக வட்டி வழங்குகின்றனன. அதுமட்டுமின்றி, இந்த FD திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு நல்ல வருமானத்தையும் அளித்து வந்ததால் அவர்களுக்கு பாதுகாப்பான முதலீடாகவும் FD திட்டங்கள் இருக்கிறது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊழியர்களுக்கு கொண்டாட்டம்... லெவல் 1-6 பே ஸ்கேல்கள் இணைக்கப்படுமா?

தற்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் FD திட்டங்களின் வட்டி விகிதங்களும் குறைகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளில் சில வியூகங்களை மாற்ற வேண்டும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். மேலும், FD திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் வங்கிகள் தங்களின் வட்டி விகிதத்தை குறைப்பதற்குள், பழைய வட்டி விகிதங்களின் கீழ் உடனே முதலீடு லாக்-இன் செய்துகொள்ளுங்கள் என்றும் அறிவுரை கூறுகின்றனர்.

மாற்று முதலீடு திட்டங்கள்

அதுமட்டுமின்றி, சில மாற்று முதலீடு திட்டங்களையும் இங்கு காணலாம். FD திட்டங்களில் வருவாய் குறைகிறது என்றால் நீங்கள் மியூச்சுல் பண்ட்ஸில் (Debt) முதலீடு செய்யலாம். மேலும், கார்ப்பரேட் பாண்டுகள், பங்குகளுடன் தொடர்புடைய சேமிப்பு திட்டங்கள் (ELSS) ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம். உங்களுக்கு ஏற்ற ரிஸ்கிற்கு ஏற்ப முதலீடு செய்யலாம்.

பல்வேறு FD திட்டங்களில் முதலீடு செய்வது

மேலும், ஒரு FD திட்டத்தில் மொத்த தொகையையும் முதலீடு செய்யாமல், வெவ்வேறு காலகட்ட FD திட்டங்களில் பிரித்து பிரித்து முதலீடு செய்யலாம். இதனால், FD-இல் குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தின் தாக்கம் உங்களை குறைவாகவே பாதிக்கும். அதாவது நீங்கள் மொத்தம் ரூ.20 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் என்றால், மொத்தமாக ஒரு திட்டத்தில் போடாமல், ரூ.5 லட்சமாக பிரித்து 4 திட்டங்களில் போடலாம். அதாவது, ஒரு வருடம், 1.5 வருடம், 2 வருடம், 2.5 வருடம் ஆகிய திட்டங்களில் நீங்கள் ரூ.5 லட்சமாக முதலீடு செய்யலாம். இந்த திட்டங்கள் முதிர்ச்சி ஆகும்போது மொத்த வருவாய் அதிகமாகும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

முதிர்ச்சிக்கு முன்னரே பணத்தை எடுப்பது

தற்போது நீங்கள் முதலீடு செய்து வரும் FD திட்டங்களில் எவற்றை இப்போதே முதிர்ச்சிக்கு முன்னரே எடுக்கலாம் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். அந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையை அதிக வருவாய் தரும் முதலீட்டில் மாற்றலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் நிபுணர்களின் கருத்தாகும். இவை பரிந்துரை அல்ல. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | EPF Interest Rate: அதிகரிக்கும் வட்டி விகிதம்? விரைவில் PF உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News