ஒரு பாரிய வளர்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா செவ்வாயன்று காங்கிரசில் இருந்து விலகினார். இந்நிலையில் அவரது ராஜினாமா 5-6 இளம் தலைவர்களை ராஜினாமா செய்ய தூண்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைவர்களாக குறிப்பிடப்படுபவர்கள் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர்கள் RPN சிங், மிலிந்த் தியோரா, ஜிதின் பிரசாதா, ஹரியானா MLA குல்தீப் பிஷ்னோய், கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் பலர்...
நெருங்கிய வட்டாரங்களின் தகவல்கள் படி மார்ச் 12-ஆம் தேதி சிந்தியா பாஜக-வில் இணையவுள்ளார். மேலும் மார்ச் 13-ஆம் தேதி மாநிலங்களவை வேட்பு மனுவுக்கு தாக்கல் செய்யவுள்ளார்.
இரண்டு நாள் கடுமையான அரசியல் நாடகத்திற்குப் பிறகு, முன்னாள் குணா எம்.பி., செவ்வாயன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை முறையாக சமர்ப்பித்தார். பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தவுடன் ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் இருந்து விலகினார். மேலும், அவரை ஆதரிக்கும் 22 எம்.எல்.ஏக்கள் பெங்களூரு ரிசார்ட்டுகளில் இருந்து ராஜினாமா செய்ய முயற்சித்தனர்.
இதனிடையே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படாதது மற்றும் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து சிந்தித்த கடந்த சில மாதங்களாக வருதத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாக இந்த அதிரடி முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனவும் யூகங்கள் வலுக்கின்றன.
மேலும் சிந்தியாவின் நடவடிக்கை காரணமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவரை ஒரு 'துரோகி' என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் சிந்தியாவின் விலகலை தொடர்ந்து அவசரக் கூட்டத்தை நடத்திய கமல்நாத், மாநிலத்தில் இடைக்கால தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு தன் கட்சியினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக கமல்நாத் தலைமையிலான அரசாங்கத்தை கலைப்பதற்காக பாஜக திட்டமிட்டு வருவதாகவும், அதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை (சுரேந்திர சிங் ஷெரா, பிசாஹுலால் சிங், ஹர்தீப் சிங் டாங், மற்றும் ரகுராஜ் கன்சானா) அக்கட்சி பெங்களூருக்கு பறக்கவிட்டதாகவும் கமல்நாத் குற்றம்சாட்டிருந்தார். கமல்நாத் குற்றச்சாட்டை அடுத்து இவர்களில் இருவர் திரும்பிய நிலையில், சிந்தியாவுக்கு விசுவாசமான 6 அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட 18 எம்.எல்.ஏக்கள் திங்கள்கிழமை பெங்களூருக்கு பறந்தனர். கமல்நாத் தனது அமைச்சரவையை கலைத்த போதிலும், அமைச்சரவை மறுசீரமைப்பு முயற்சியில் தோல்வி மட்டுமே மிஞ்சியது.
230 இடங்கள் கொண்ட மத்தியபிரதேச சட்டசபையில் இரு எம்.எல்.ஏத-க்கள் இறப்பை அடுத்து 228-எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அதாவது சட்டசபையில் தற்போதைய பாதி மதிப்பெண் 114-ஆக உள்ளது. பாஜக தன்வசம் 107 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கிறது. அதேவேளையில் 114 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த காங்கிரஸ் - இப்போது 92 எம்.எல்.ஏக்களாக குறைக்கப்பட்டுள்ளது. 22 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா, மேஜிக் எண்ணை 103-ஆகக் குறைந்துள்ளது. மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றபோதிலும் இதுவரை ராஜினாமாக்களில் எதையும் சபாநாயகர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.