ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜபுர பகுதியில் உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவத்தில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜபுர பகுதியில் உள்ள கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ராஜபுர பகுதியில் உள்ள கிராமத்தை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர்.
#UPDATE Four terrorists have been killed.Arms and ammunition recovered https://t.co/23BX6oZUie
— ANI (@ANI) December 29, 2018
இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், மற்றும் வெடி மருந்து பொருட்களை மீட்டுள்ளனர்.