புதுடெல்லி: பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) விமானத்தில் பயணிகளின் பேக்கேஜ்களை கையாளுபவர், விமானத்தில், பயணிகளின் லக்கேஜ்களை வைக்கும் சரக்கு பெட்டியிலேயே தூங்கி விட்டார். விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டவுடன் தான் எழுந்தார். 6E 1835 (மும்பையில் இருந்து அபுதாபி செல்லும் விமானம்) விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.59 மணியளவில் புறப்பட்ட ஏர்பஸ் A320 விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அபுதாபியில் விமானம் தரையிறங்கியதும், பேக்கேஜ்கள் வைக்கும் இடம் திறக்கப்பட்ட பிறகுதான் விமானத்தில் அவர் இருப்பதை விமான நிறுவனம் அறிந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) விமானம் அபுதாபியில் தரையிறங்கிய பிறகு, அபுதாபி அதிகாரிகள் இண்டிகோ பணியாளருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது உடல் நிலை சீராகவும் இயல்பாகவும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ALSO READ | நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு..! அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம்
அபுதாபியில் உள்ள அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, இண்டிகோ பணியாளர் அதே விமானத்தில் பயணியாக மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய விமான நிறுவனத்தின் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என DGCA அதிகாரிகள்மேலும் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிய வந்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது” என்றார்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) செவ்வாய்கிழமை ஒரு அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ALSO READ | Indian Army: இந்திய ராணுவத்தின் புதிய சீருடையில் டிஜிட்டல் பிரிண்ட்! காரணம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR