இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்குழு(CISCE) -வின் ICSE 10-ஆம் வகுப்பு மற்றும் ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
இத்தேர்வின் முடிவுகளை, மாணவர்கள் தேர்வுக்குழுவின் அதிகாரபூர்வ வலைதளமான cisce.org or என்னும் இணைப்பில் கண்ட தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10.88 லட்சம் தேர்வாளர்கள் இந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் 6,28,865 பேர் மாணவர்கள் எனவும் 4,60,026 பேர் மாணவிகள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில் 10-ஆம் வகுப்பு தேர்வினை பொறுத்தவரை சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?
- http://www.cisce.org/ எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
- இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் Result எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.
- அல்லது Result எனும் இணைப்பினை கிளிக் செய்யவும்.
- கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
- பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
- பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.