கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய ஏதுவாக பல்வேறு சிறப்பு வழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வழிகளை பயன்படுத்தி பொதுமக்கள் நிதி வழங்கலாம் என கேரளா அரசு அறிவித்துள்ளது!
கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.... இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கேரளாவில் காஸர்காட் மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நிதி வழங்க ஏதுவாக கேரளா அரசு தனி இணையப்பக்கதினையும் அறிமுகம் செய்துள்ளது. மேலும் Paytm, Amazon மொபைல் செயலிகள் கேரளாவிற்காக நிவாரண நிதி வாங்குவதற்கு தனி வசதியினையும் அளித்து வருகின்றது.
வெள்ள நிவாரண நிதி வழங்க விரும்புவோர் கீழ் காணும் வழிகளை பின்பற்றலாம்...
Here's how you can help those affected by the unprecedented floods in Kerala. Now you can make donations online to Chief Minister's Distress Relief Fund through the site, https://t.co/OFHTHlZ9by #KeralaFloods #StandWithKerala. pic.twitter.com/XNlBKqdCUT
— CMO Kerala (@CMOKerala) August 14, 2018
ஆன்லைன் மூலம் செலுத்த விரும்புவோர் https://donation.cmdrf.kerala.gov.in என்ற இணைப்பினை பின்தொடரவும்.
வங்கி கணக்கின் மூலம் செலுத்த விரும்புவோர்...
Chief Minister Distress Relief Fund
AccNo: 67319948232
Bank : State Bank of India
Branch : City Branch, Thiruvananthapuram
IFSC : SBIN0070028
PAN : AAAGD0584M
Swift Code : SBINIBBT08