குஜராத் தேர்தல்;ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்!

குஜராத் தேர்தலநாளை நடைபெற இருப்பதால் ராகுல்காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

Last Updated : Dec 8, 2017, 05:39 PM IST
குஜராத் தேர்தல்;ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்!  title=

இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், 33 மாவட்டங்கள், 182 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலதிற்கு வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு 2 கட்டமாக நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி மற்றும் 14-ம் தேதி என வாக்குபதிவு இரண்டு கட்டமாக நடைபெறும். குஜராத் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடியும் கட்டத்தில் இருந்ததால், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தீவிர பிரசாரத்தில் இன்று ஈடுபட்டனர்.

இந்த மாதம் நடக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியுடன் ஹர்திக் படேலுடன் கைகோர்த்திருப்பதால் பாரதீய ஜனதா கட்சிக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால் காங்கிரஸ் துணைத்தலைவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் கூறியதாவது:-

கர்நாடகாவில் உள்ள உணவுப்பொருட்களை விலைக்கு வாங்குவதற்கு காங்கிரஸ் ஒரு பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது குஜராத் மக்களின் நலனுக்கான முயற்சி என்றார். பாஜக குஜராத் நலனுக்காக  தேர்தல் அறிக்கை வெளியிட தயாராக இல்லை. பா.ஜ.க. உங்களுக்காக எதாவது செய்யும் என்று நினைக்கிறீர்களா, அது ஒன்றும் உங்களுக்கு செய்யாது. 

மேலும், அவர் தேர்தலில் வெற்றி பெற்ற 10 நாட்களில் காங்கிரசு கட்சி விவசாயி கடன் தள்ளுபடிக்கு ஒரு கொள்கை வகுக்கும் என உறுதி கூறினார்.  

இந்தியாவின் பிரதம மந்திரி பதவிக்கு காங்கிரசு மரியாதை செலுத்துகிறது. அதனால்தான் நாங்கள் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

Trending News