சொந்த மகளை திருமணம் செய்த மத போதகர்... மொத்தம் 20 மனைவிகள் - அதிர்ந்த FBI

மத போதகர் என்ற தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர், சிறுமியான தனது சொந்த மகள், 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் உள்பட மொத்தம் 20 பேரை திருமண செய்த நிலையில் அவர்  தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 5, 2022, 05:50 PM IST
  • இவர் பல தாரமணத்தை மேற்கொள்பவர்களின் குழுவின் போதகராக உள்ளார்.
  • அந்த குழுவின் உறுப்பினர்களையும் தங்களின் சிறு வயது மகள்களுடன் உடலுறவில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
  • இவரின் 20 மனைவிகளில் பெரும்பாலானோர் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.
சொந்த மகளை திருமணம் செய்த மத போதகர்... மொத்தம் 20 மனைவிகள் - அதிர்ந்த FBI title=

அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் பல தாரமணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் தனது சொந்த மகள் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

FBI ஆவணங்களின்படி, 46 வயதான சாமுவேல் ராப்பிலி பேட்மேன், 15 வயதுக்குட்பட்ட இளம் பெண்களை திருமணம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Fundamentalist Church of Jesus Christ of Latter-Day Saints (FLDS) என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பலதார மணம் கொண்ட ஒரு குழுவின் போதகராக சாமுவே இருந்துள்ளார். 2019இல் இந்த சிறிய குழுவை பின்பற்றுபவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு, சாமுவேல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்யத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மாந்தரீகர் கட்டுபாட்டில் புடின்; மான் இரத்தத்தில் குளியில்... ரஷ்ய பத்திரிகையாளரின் பகீர் தகவல்!

ஒரு கட்டத்தில், அவர் சிறுமியான தனது சொந்த மகளையே திருமணம் செய்துகொண்டுள்ளார். 46 வயதான அவர் 20 பெண்களை மணந்துள்ளார் என்று FBI ஆவணங்கள் கூறுகின்றன. அவர்களில் பலர் மைனர்கள் என்றும் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த குழுவின் உறுப்பினர்களையும் தங்களின் சிறு வயது மகள்களுடன் உடலுறவில் ஈடுபட அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கொலராடோ நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளில், FBI அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு பின், அவரை கைது செய்து அரிசோனா சிறையில் அடைத்துள்ளனர். 

சாமுவேல் மீதான சந்தேகம் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் மற்றும் இருவரைக் கொண்ட அவரது கார் கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் மாநில எல்லையில் எதர்ச்சையாக சோதனை செய்யப்பட்டது. அவர் மாகாண எல்லைகள் வழியாக சிறுமிகளை மற்றொரு மாகாணத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டபோது, முதன்முறையாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

அப்போது அவர் கைது செய்யப்பட்டு மூன்று சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டார். இருப்பினும், சில நாள்களிலேயே பிணையில் வெளியே வந்தார். 

அதன்பின்னர்தான், அவரின் வீட்டில் FBI சோதனை மேற்கொண்டது. அவரும் வேறு சிலரும் அரிசோனா, உட்டா, நெவாடா மற்றும் நெப்ராஸ்கா இடையே சிறார்களை கடத்திச் சென்றதாக நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக FBI ஆவணங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | ஊபரில் சென்று வங்கியை கொள்ளை அடித்த திருடன் - சிங்கம் சூர்யாவாக மாறிய போலீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News