ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக சர்ச்சை கருத்து கூறிய அஸாம் கான், 72 மணிநேரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்தது தேர்தல் ஆணையம்!
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் தொகுதியில் அஸாம் கானுக்கு எதிராக பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதாவை போட்டியாக நிறுத்தியுள்ளது.
Election Commission bars Samajwadi Party (SP) leader Azam Khan from election campaigning for 72 hours starting from 10 am tomorrow, for violating Model Code of Conduct during his election campaign held in Rampur. #LokSabhaElections2019 pic.twitter.com/a9GJl385Kk
— ANI (@ANI) April 15, 2019
சமீபத்தில் பாஜக-வில் இணைந்த ஜெயப்பிரதா முன்பு இதே தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர். இந்நிலையில் சமீபத்தில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அஸாம் கான், இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். மக்களின் ரத்தத்தை குடித்தார், ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை பற்றி புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன் என சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
ஆஸாம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆஸாம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார்.
இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் ஜெயப்பிரதா கூறுகையில், இது போன்ற சர்ச்சை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2009-ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் வேட்பாளராக இருந்தேன். ஆனால் ஒருவர் கூட ஆஸாம் கூறியது தவறு என எதிர்த்தும், என்னை ஆதரித்தும் பேசவில்லை.
நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் என்ன கூறினார் என்பதையும் சொல்ல இயலவில்லை. நான் ஆஸாமிற்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வாறு பேச வேண்டும்?
ஆசம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்ன ஆகும்? என சிந்தியுங்கள். சமூகத்தில் பெண்களுக்கென இடமே கிடைக்காது. நாங்கள் உரிமைக்காக எங்கே போக வேண்டும்? நான் இறந்தால் நீங்கள் திருப்தியாக இருப்பீர்களா? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், நான் அவ்வாறு செய்யமாட்டேன்" என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஜெயப்பிரதா உள்ளாடை குறித்து பேசிய அஸாம் கான் மீது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அஸாம் கான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள 72 மணி நேரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.