ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Last Updated : May 16, 2019, 02:08 PM IST
ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு! title=

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் உள்ள ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று புகார் எழுந்தது.

தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1 ஆம் தேதி ஒத்தி வைத்தது. 

 

Trending News