ராஜஸ்தான் மாநிலத்தில் பசும்பாலை விட, கோமியத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில், பசு வளர்க்கும் விவசாயிகள், பாலை லிட்டருக்கு 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் உயர் ரக பசுக்களை வளர்ப்போர், அதன் கோமியத்தை விற்பனை செய்து வருகின்றனர். அது லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக கைலாஷ் குஜ்ஜார் என்பவர் கூறுகையில்:-
பசு கோமியத்தை விற்க துவங்கிய பிறகு, எனது வருமானம் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. மருத்துவ காரணங்களுக்காகவும், மத சடங்குகளுக்கும் பசு கோமியத்தை பயன்படுத்தி வருகின்றனர். பசு கோமியம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக இரவு முழுதும் விழித்திருந்து அதனை பிடித்து வருகிறோம்.
ஜெய்ப்பூரை சேர்ந்த பால் வியாபாரி ஓம் பிரகாஷ் மினா கூறுகையில்:-
ஒரு லிட்டர் பசு கோமியத்தை லிட்டருக்கு 30 ரூபாய் முதல் வரை 50 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். இந்த கோமியமானது பயிர்கள், பூச்சி தாக்குதலில் இருந்து அகற்ற பயன்படும் என்றார்.