Vijay To Announce District Secretaries : தமிழக அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கியிருக்கும் கட்சி, தமிழக வெற்றிக்கழகம். எந்த கட்சியின் கூட்டணியும் இன்றி, இப்போதைக்கு தனித்து நிற்கும் இந்த கட்சியின் தலைவராக இருக்கிறார், விஜய். சில மாதங்களுக்கு முன்னர் வி.சாலையில் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தில் முடித்த இவர், அடுத்தடுத்து தனது பேசுக்களாலும் செயல்களாலும் மக்கள் மற்றும் பிற கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்த விஜய், அதற்கான முன்னெடுப்புகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார். இதற்கான ஒரு கட்டம்தான், மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பனையூர் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, மாவட்ட செயலாளருக்கான லிஸ்டில் இருப்பவர்களை விஜய் நேர்காணல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யாருக்கெல்லாம் வாய்ப்பு?
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பனையூர் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, மாவட்ட செயலாளருக்கான லிஸ்டில் இருப்பவர்களை விஜய் நேர்காணல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க கட்சியின் மாவட்ட செயலாளர்களாக தேர்வு செய்யப்பட இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களின் பெயர் பட்டியல் மற்றும் தொகுதி விவரம் பின்வருமாறு:
1.விருகம்பாக்கம்-அண்ணா
2.தி.நகர்-அப்புனு
3.அம்பத்தூர்-பாலமுருகன்
4.பூக்கடை-குமார்
5.இசிஆர்-சரவணன்
6.திருவொற்றியூர்-நவீன்
7.மதுரை-விஜய் அன்பன்
8.நெல்லை-சாஜி
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் காலை 9.30 மணிக்கு மேல் வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.
பரந்தூர் பேச்சு..
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று கோரி, 900 நாட்களுக்கும் மேலாக அவ்வூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், இது நாளுக்கு நாள் வலுபெற்று வரும் நிலையில், திடீரென்று நடிகர் விஜய் அந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். கடைசியாக, “உங்கள் கூடவே நிற்பேன்..” என்று கூறிவிட்டு வெற்றி நிச்சயம் என முழக்கமிட்டு தனது உரையை முடித்தார். விஜய்யின் இந்த பேச்சும், அவரது அரசியல் அசைவுகளும் பிற கட்சிகள் மற்றும் மக்களிடையே விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தனது உரையில், திமுக கட்சியை விளாசிய அவர் “எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலை, ஆளுங்கட்சியானவுடன் வேறு நிலை எடுப்பதா?” என்று கேட்டார். இதற்கு முன்னர் தனது முதல் மாநாட்டிலும் திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளை கொள்கை எதிரிகள் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | அனல் பறந்த விஜய் பேச்சு!! பரந்தூரில் அவர் பேசிய விஷயங்கள் என்னென்ன? ஹைலைட்ஸ் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ