காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க உள்துறை அமைச்சகம் சிறப்புப்படையை களமிறக்கியுள்ளது!!
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பி.டி.பி. மற்றும் பா.ஜ.க இடையிலான கூட்டணியை முடித்து கொண்டதாக பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஜம்முகாஷ்மீரில் வன்முறை வெடித்து வரும் நிலையில், இந்த இரு கட்சிகளுக்கான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, உயர்ரக ஆயுதங்கள் மற்றும் ரேடார்கள் உதவியுடன் தேசிய பாதுகாப்பு படை பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷனில் இறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு ஆப்ரேஷன்களுக்கு தேசிய பாதுகாப்பு படை களமிறக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியது. ஜம்மு கஷ்மீர் போலீசுக்கும் தேசிய பாதுகாப்பு படை குர்கான் அருகே சிறப்பு பயிற்சியை வழங்கியது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் சிறப்புப்படையான தேசிய பாதுகாப்பு படையினர் கமாண்டர்கள் ஸ்ரீநகர் அருகேஉள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். கடந்த இரண்டு வாரமாக சிறப்பு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். விமான கடத்தலை தடுப்பதில் சிறப்பான தேர்ச்சிபெற்ற தேசியப் பாதுகாப்பு படையை விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தேசிய பாதுகாப்பு படையை பயன்படுத்துவதால் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு குறையும் என அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
3டி ரேடாருடன் சுவரை தாண்டி பதுங்கியிருப்பவர்களை துல்லியமாக வேட்டையாடுவதற்கான ஆயுதங்களை கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு படை பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடிக்க மிகவும் உதவியாக இருக்கும், பாதுகாப்பு படைகளின் உயிரிழப்பை தடுக்கவும் வழிவகை செய்யும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.