புதுடெல்லி: நிர்வாணமாக திரிவது பெண்கள் மத்தியில் கலாசாரமாகி வருவதால், பெங்களூருவில் மானபங்கபடுத்தப்பட்டதாக சமாஜ்வாதி எம்.பி., அபு ஆஸ்மி கூறியுள்ளார்.
பெங்களூரில், டிசம்பர் 31 நள்ளிரவு, பிரபலமான, எம்.ஜி., ரோட்டில், ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஏராளமான பெண்களும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, சிலர், பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம், பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பேசிய அம்மாநில உள்துறை மந்திரி பரமேஸ்வரா பெண்கள் மேற்கத்திய உடைகளின் மீது கொண்டு உள்ள நாட்டம்தான் காரணம், என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வரிசையில் இப்போது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அபு அஸ்மி இணைந்து உள்ளார். நிர்வாணமாக திரிவதை பெண்கள் பேஷனாக சொல்கின்றனர். இதனால், மானபங்க சம்பவம் நடக்க காரணமாகிறது. நமது கலாசாரத்தை மீறி நடப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கலாசாரம் மாறி வருகிறது. மேற்கத்திய கலாசாரம் நமது கலாசாரத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஈர்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால், நாம் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும். நள்ளிரவிருக்கு மேல் பெண்கள் தனியாக செல்லாமல் கணவர், தந்தையுடன் செல்ல வேண்டும் என்று அபு அஸ்மி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி பேசியுள்ள அபு அஸ்மி பெண்கள் மேம்பாட்டிற்கு எதிரானது கிடையாது என்றும் பெங்களூருவில் தவறாக நடந்துக் கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்