ரக்ஷா பந்தன் விழாவிற்கு மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் பெண்களுக்கு கழிப்பறை கட்டித்தரும் திட்டத்தை முன் வைக்கின்றனர் அதிகாரிகள்.
அதன்படி 854 சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு கழிப்பறை கட்டித்தருவார்கள். இதை அவர்கள் தங்களது சொந்தச் செலவில் செய்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு தாலுக்காக்கள், ஒன்றியங்களிலிருந்து இவர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழிப்பறைகளை கட்ட வேண்டும்.
கட்டிய பின்னர் குலுக்கள் முறையில் மூன்று பரிசுகள் வழங்கப்படும். ரொக்கப்பரிசாக ரூ. 50,000 மும் மொபைல் போன்களும் வழங்கப்படும்.
கட்டப்பட்ட கழிவறைகளை அதிகாரிகளின் குழு ஒன்று ஆராயும். அதன் பின்னர் மாவட்ட அளவிலான விழா ஒன்றில் பரிசுகள் வழங்கப்படும் என்றனர் அதிகாரிகள்.