புதுடில்லி: உங்களுக்கு வங்கியில் ஏதேனும் அவசர வேலை இருந்தால், அதை இன்று செய்து முடித்து விடுங்கள். ஏனெனில் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் வியாழக்கிழமை அதாவது நவம்பர் 26 அன்று வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான செய்தியை சமூக ஊடகம் மூலம் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளன. வங்கிகள், மறுநாள் அதாவது நவம்பர் 27 அன்று தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்கும். இதன் பின்னர், நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மீண்டும் மூடப்படும்.
நவம்பர் 26 வேலைநிறுத்தம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை (Digital Transactions) பாதிக்காது. பயனர்கள் நெட்பேங்கிங் அல்லது மொபைல் வங்கி சேவைகள் மூலம் பரிவர்த்தனைகளை நடத்த முடியும். மக்கள், ATM-களில் இருந்து பணத்தை எடுக்கலாம்.
எதற்காக வேலை நிறுத்தம்?
மத்திய அரசின் (Central Government) தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் கோரப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) செவ்வாய்க்கிழமை, அரசாங்கத்தின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நவம்பர் 26 ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் சேரப்போவதாகக் கூறியது. பாரதிய மஜ்தூர் சங்கத்தைத் தவிர பத்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தைக் கடைப்பிடிக்கவுள்ளன.
மக்களவை சமீபத்தில் நடத்திய அமர்வில் மூன்று புதிய தொழிலாளர் சட்டங்களை (Labour Laws) நிறைவேற்றியுள்ளது. இதில் தற்போதுள்ள 27 சட்டப் பிரிவுகள், ‘ஈஸி ஆஃப் பிசினஸ்’ என்ற பெயரில் அகற்றப்படுகின்றன. இது முற்றிலும் நிறுவனங்களின் நலனுக்காகவே செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டில், 75 சதவீத தொழிலாளர்கள், தொழிலாளர் சட்டங்களின் வரம்பில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு புதிய சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ பாதுகாப்பு இருக்காது” என்று AIBEA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: லேண்ட் லைனில் இருந்து மொபைல் எண்ணை அழைக்கும் முறை ஜனவரி 1 முதல் மாறும்..!
எந்த வங்கிகள் மூடப்பட்டிருக்கும்?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தவிர பெரும்பாலான வங்கிகளை AIBEA பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பல்வேறு பொது மற்றும் பழைய தனியார் துறையைச் சேர்ந்த நான்கு லட்சம் வங்கி ஊழியர்களையும் ஒரு சில வெளிநாட்டு வங்கிகளையும் அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் (Maharashtra), பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் 10,000 வங்கி கிளைகளில் இருந்து சுமார் 30,000 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வதாக AIBEA வெளியீடு தெரிவித்துள்ளது.
வங்கி தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறைக்கு எதிர்ப்பு, போதுமான ஆட்சேர்ப்பு, கடனைத் திருப்பிக்கட்ட தவறிய பெரிய கார்ப்பரேட்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, வங்கி வைப்பு மீதான வட்டி வீத அதிகரிப்பு மற்றும் சேவையை குறைத்தல் போன்ற கோரிக்கைகளிலும் நவம்பர் 26 ம் தேதி வங்கி ஊழியர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ALSO READ: Yes Bank வாடிக்கையாளரா நீங்கள்? Reward Points பற்றிய ஒரு good news உங்களுக்கு…..
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR