Weight Loss Tips: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக்’ டிரிங்க்..!!

உடல் பருமன் குறிப்பாக, தொப்பை மற்றும் இடுப்பில் சதை என்பது தோற்றத்தை பெரிதும் கெடுத்து விடும். ஆனால் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மசாலாவை பயன்படுத்தி பானத்தை தயார் செய்து குடித்தால், எடை குறைப்பது எளிது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 13, 2023, 05:15 PM IST
  • தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு அதிகரித்த பிறகு, அதைக் குறைப்பது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கின்றனர்.
  • ஸ்பெஷல் பானத்தை குடிப்பதன் மூலம், நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.
  • வீட்டில் தினமும் உபயோகப்படுத்தும் மசாலா.
Weight Loss Tips: தொப்பையை  வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக்’ டிரிங்க்..!! title=

உடல் எடையை குறைக்கும் பானம்: தற்போது உடல் எடை அதிகரித்து வருவதால் வயது மற்றும் பாலினம் வித்தியாசம் ஏதும் இல்லாமல் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம், ஆகியவை இதற்கு முக்கிய காரணம். தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு அதிகரித்த பிறகு, அதைக் குறைப்பது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு, அதற்கு நிச்சயம் தீர்வு உண்டு. ஒரு ஸ்பெஷல் பானத்தை குடிப்பதன் மூலம், நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்கலாம். இந்த பானத்தை தயார் செய்வது எளிதானது.  ஏனென்றால், இதை வாங்க எங்கு செல்ல வேண்டியது இல்லை. நம் வீட்டில் தினமும் உபயோகப்படுத்தும் மசாலா தான். இது

தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல, ஆனால் வீட்டில் கிடைக்கும் சீரக மசாலாவை பயன்படுத்தினால், இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் ஆயுஷி யாதவ், அதிகரித்து வரும் எடையைக் குறைக்க சீரகத் தண்ணீரைக் குடிப்பது வியக்கதக்க பலன்களை தரும் என்று கூறினார். இது உடல் கொழுப்புக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. உடலில் உள்ள செரிமான அமைப்பில் பிரச்சனை ஏதும் இல்லாமல் வைத்திருப்பதோடு, உடலின் நச்சுகளை நீக்கி, தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
உடல் பருமனை குறைக்கும் சீராக நீர்

சீரகம் இல்லாமல் பல இந்திய சமையல் வகையில் ருசியோ, மணமோ வருவதில்லை. இதை சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அனைத்து வயிற்று கோளாறுகளிலிருந்தும் விடுபடலாம். சீரக பானத்தை குடிப்பது நன்மை பயக்கும், ஏனெனில் அதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. சீரக நீரில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

மேலும் படிக்க |  உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

சீரக பானம் தயாரிக்கும் முறை 

சீரக பானம் தயாரிக்க, 2 ஸ்பூன் சீரகத்தை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆறிய பின் பருத்தி துணியால் வடிகட்டவும். கடைசியாக இந்த பானத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். 2-3 வாரங்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால், அதன் பலனை கண்கூடாட்க பார்க்கலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் சீரகத்தை பச்சையாக மென்று சாப்பிடலாம். இருப்பினும், சீரக பானத்தை எளிதில் தயார் செய்ய விரும்பினால், அதை அரைத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் சீரகப் பொடியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். உணவுக்குப் பிறகு இந்த பானத்தை குடித்தால், அதிக பலன்கள் கிடைக்கும்.

குறைந்த கலோரி உள்ள பானம்

எனவே அன்றாடம் சீரகம் எடுத்து கொள்வதை வழக்கமாக்கினால் உடல் பருமன் குறையும். சீரகமானது உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை உடையது என்பதால், எடையை குறைக்கும் முயற்சியை எளிதாக்கும். சீரகத்தை தண்ணீரில் ஊற வைப்பதனால் பல நன்மைகளை கிடைக்கின்றன. இந்த இயற்கையான செயல்முறையின் சீரகத்திலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் கலக்கின்றது. சீரகத்திலிருந்து வெளி வந்த ஊட்டச்சத்து தண்ணீரில் மஞ்சள் நிறத்தில் கலந்து விடுகிறது. மேலும், சீரக தண்ணீர் மிக குறைந்த கலோரி உள்ள பானம். 

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த விதைகளில் இருக்கு அதற்கான வழி

நீரிழிவுக்கு மருந்தாகும் சீரகம்

சீரக தண்ணீர் குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு தீர்வாக இருக்கிறது. முக்கியமாக, டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சாப்பிடுவதற்கு முன்பாக இருக்கும் சர்க்கரை அளவை, சீரகம் சீராக்குவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. சீரகத்தில் தைமோக்யூனியன் என்ற வேதியல் பொருள், ரத்த குளுக்கோஸை குறைக்க உதவுகிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News