உங்கள் எலும்புகளில் வலுவில்லையா? காரணம் இதுதான், இப்படி சரி செய்யுங்கள்

Bone Health: உங்கள் எலும்புகள் வலுவாக உள்ளனவா? இவை முக்கிய காரணங்களாக இருக்கலாம். எலும்புகளை வலுவடையச் செய்ய இந்த எளிய முறைகளை பின்பற்றவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 16, 2022, 02:23 PM IST
  • எலும்புகளை வலுவாக வைத்திருக்க விரும்பினால், தேநீர்-காபி உட்கொள்வதைக் குறைக்கவும்.
  • உலர் பழங்களான முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • எலும்புகள் வலுவாக இருக்க பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
உங்கள் எலும்புகளில் வலுவில்லையா? காரணம் இதுதான், இப்படி சரி செய்யுங்கள் title=

பலவீனமான எலும்புகளுக்கான காரணங்கள்: நம் உடலை வலுவாக வைத்திருக்க வேண்டுமென்றால், எலும்புகளை வலுவாக்குவது அவசியம். ஆனால் வயது அதிகரிக்கும் போது அவை பலவீனமடையத் தொடங்குகின்றன. ஏனெனில் 35 முதல் 40 வயதிற்குப் பிறகு, உடலில் கால்சியம் குறையத் தொடங்குகிறது. இது எலும்புகள் மற்றும் பற்களை பாதிக்கிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் டி-யும் நம் அன்றாட உணவில் அவசியம் தேவை. அப்போதுதான் உடல் வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும். எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும் காரணங்கள் என்னவென்று இங்கே பார்க்கலாம். 

இந்தப் பழக்கங்களால் எலும்புகள் பலவீனமடைகின்றன

1. அடிக்கடி சிவப்பு இறைச்சியை அதிகம் உட்கொள்பவர்களின் உடலில் தேவைக்கு அதிகமாக புரதம் கிடைக்க ஆரம்பித்துவிடும்.இதனால் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்பட்டு உடல் கழிவுகளை வெளியேற்றும் போது அதிகளவு கால்சியம் உடலில் இருந்து வெளியேறுகிறது. எனவே, புரதச்சத்து நிறைந்த உணவை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.

2. குளிர் பானங்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை அதிகம் உட்கொள்பவர்கள் வலுவற்ற எலும்பு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய பானங்களில் அதிக பாஸ்பேட் உள்ளது. இது கால்சியத்தை குறைக்கிறது. ஆகையால் இவற்றை உட்கொள்வதால், எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன.

3. சிலர் அமிலத்தன்மை கொண்ட மருந்துகளை அதிகமாக உட்கொள்கிறார்கள். அவர்கள் அதை நிறுத்த வேண்டும். இந்த மருந்துகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களை உறிஞ்சுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

4. நீங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க விரும்பினால், தேநீர்-காபி உட்கொள்வதைக் குறைக்கவும். ஏனெனில் அதில் உள்ள கேபின் எலும்புகளை பாதிக்கிறது. இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு அதிக காஃபின் தேவைப்படுகிறது. இது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் படிக்க | Soya Fiber: உடல் எடை குறைய வைக்கும் சோயாவின் புரோட்டின் மாயம்

எலும்புகளை வலுப்படுத்தும் வழிகள்

1. உலர் பழங்களான முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

2. நீங்கள் இனிப்புக்காக சர்க்கரையை சாப்பிட்டால், இன்று முதல் வெல்லத்தை சாப்பிடத் தொடங்குங்கள். இதனால் உங்கள் உடலுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கும்.

3. பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடாமல் இருந்தால், இனி உட்கொள்ள தொடங்குங்கள். பால் தவிர, தயிர் மற்றும் பாலாடைக்கட்டியாலும் பலன் கிடைக்கும்.

4. எலும்புகள் வலுவாக இருக்க பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த பழக்கத்தினால் இதய நோய், பக்கவாதம் ஏற்படலாம்: அதிர்ச்சி ஆய்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News