மூளை - நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு.... அறிகுறிகளும்.. கை கொடுக்கும் உணவுகளும்

Vitamin B12: வைட்டமின் பி12 மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமான ஊட்டச்சத்து. இந்நிலையில், வைட்டமின் பி 12 குறைப்பாட்டை உணர்த்தும் அறிகுறிகளையும், குறைபாடு ஏற்படாமல் இருக்க சப்பிட வேண்டிய உணவுகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 15, 2025, 01:37 PM IST
  • வைட்டமின் பி 12 இன் குறைபாடு, மூளை பாதிப்புடன் பிற நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
  • வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்.
  • சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்கலாம்.
மூளை - நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு.... அறிகுறிகளும்.. கை கொடுக்கும் உணவுகளும் title=

Vitamin B12: வைட்டமின் பி12 மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமான ஊட்டச்சத்து. மேலும், இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவது, உள்ள முக்கிய வேலைகளை செய்கிறது. இந்நிலையில், வைட்டமின் பி 12 குறைப்பாட்டை உணர்த்தும் அறிகுறிகளையும், வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் இருக்க சப்பிட வேண்டிய உணவுகளையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

உடலில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் நீண்ட கால குறைபாடு ஆபத்தானது. இதனால் உடலில் பல நோய்கள் உருவாகும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அவற்றின் குறைபாடு உடலில் பல வகையான நோய்கள் உருவாகத் காரணமாகின்றன. உடலில் நீண்ட நாட்களாக வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், ஆபத்தான நோய்கள் வரக்கூடும் என்று என்சிபிஐ நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வைட்டமின் பி 12 இன் குறைபாடு, நரம்பு மற்றும் மூளை பாதிப்புடன், இதய செயலிழப்பு, வகை 1 நீரிழிவு, இரைப்பை புற்றுநோய், முடக்கு வாதம், மற்றும் நினைவாற்றல் பாதிப்பு உள்ளிட்ட பிற நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்

1. கைகள் மற்றும் கால்களின் உணர்வின்மை

2. மனதில் குழப்பம் மற்றும் சோர்வு

3. ஹீமோகுளோபின் குறைபாடு மற்றும் இரத்த சோகை

4. உடல் பலவீனம்

5. நரம்புகள் பாதிப்பு

6. நினைவாற்றல் இழப்பு

மேலும் படிக்க | உங்கள் பிள்ளையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க.. நினைவாற்றல் பெருக... உதவும் சூப்பர் உணவுகள்

வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகள்

வைட்டமின் பி12 குறைவினால் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இதனால் நினைவாற்றல் பாதிக்கப்படும். வைட்டமின் பி12 குறைபாடு உடலில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி தொந்தரவு செய்கிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள், சோர்வு, பலவீனம், தோல் தொற்று மற்றும் கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்

சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் தங்கள் உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். வயிற்றில் அமிலம் குறைய ஆரம்பிக்கும் போதும், ​​வைட்டமின் பி12 உடலிலும் குறையும். சில நேரங்களில் அமிலத்தைக் குறைக்கும் மருந்துகளும் வைட்டமின் பி12 குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது. உடலில் உள்ள வைட்டமின் பி12 வயதுக்கு ஏற்ப குறையத் தொடங்குகிறது. இது மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

வைட்டமின் பி12 குறைபாட்டினை நீக்க சாப்பிட வேண்டிய உணவுகஃள்

வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க, பால் மற்றும் பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை சாப்பிட வேண்டும். சைவ உணவு உண்பவர்கள் நட்ஸ் வகைகள், பாலாடைக்கட்டி, காளான், பருப்பு வகைகள், வலுவூட்டப்பட்ட பழங்களை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் பி 12 குறைபாட்டை பூர்த்தி செய்யலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் இறைச்சி, மீன், கோழி மற்றும் விலங்கு பொருட்களை சாப்பிடலாம். மீன், சிவப்பு இறைச்சி, விலங்கு கல்லீரல் மற்றும் சிக்கன் ஆகியவற்றில் அதிக வைட்டமின் பி12 காணப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | எச்சரிக்கை... தைராய்டு முதல் சிறுநீரக கல் வரை... அளவிற்கு மிஞ்சிய கீரை நல்லதல்ல

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News