2025 சனி பெயர்ச்சியும்... அஷ்டம சனியும்... சனியில் பிடியில் சிக்கப் போகும் ராசி எது?

சனி பெயர்ச்சி 2025 பலன்கள்: நீதி கடவுள் என்று அழைக்கப்படும் சனிபகவான் ஒரு மற்றொரு வாசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஏற்படும் ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி ஆகியவை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன், ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. சனிப்பெயர்ச்சி, மற்ற கிரக பெயர்ச்சிகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து குரு பகவான் ஆட்சி செய்யும் ராசியான மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

1 /8

சனி பெயர்ச்சி 2025: மனிதர்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன், மிகவும் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.இந்நிலையில், இன்னும் 2 1/2 மாதத்தில் சனி பெயர்ச்சி நடைபெற இருக்கிறது.

2 /8

சனி பெயர்ச்சி தேதி: வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி, சனி பகவான் குரு பகவான் ஆட்சி செய்யும் ராசியான மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சில ராசிகளுக்கு எழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி காலம் பாதிப்பை ஏற்படுத்தும்.

3 /8

அஷ்டம சனி: சனிபகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகவதால், சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தோஷம் ஏற்படுகிறது. சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்கும் சனிபகவானுக்கும் பகை உறவு இருப்பதால், சிம்ம ராசிக்கு அஷ்டம சனி அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

4 /8

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கடக ராசியினர், அஷ்டம சனியில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதிலிருந்து விடுபடுகிறார்கள். சிம்ம ராசிக்கு எட்டாம் இடம் மீன ராசி என்பதால், 2025 சனிப்பெயர்ச்சி காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி தொடங்குகிறது. இப்போது 2027 ஆம் ஆண்டு வரை சிம்ம ராசிக்கு அஷ்டம சனி பாதிப்பு இருக்கும்.

5 /8

சிம்ம ராசி: அஷ்டம சனி பாதிப்பு காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் உடல்நல பிரச்சனை முதல் நிதி இழப்பு, உறவுகளில் பாதிப்பு, குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் என பல வகைகளில் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

6 /8

அஷ்டம சனி பரிகாரங்கள்: சிம்ம ராசிக்காரர்கள், சனிபகவானின் அருளை பெற்று, அஷ்டம சனி ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட, காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சனிபகவானை வழிபடுவது பலன் தரும். அதே போன்று தினமும் 21 முறை சனி பகவான் காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதும் பலன் கொடுக்கும்.

7 /8

ஜோதிட பரிகாரங்கள்: ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது எப்போதுமே சனி பகவான் மனதை குளிர்விக்கும். அதேபோன்று கடின உழைப்பாளிகளையும் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறை யாக சிந்திக்க முயற்சி செய்வதும் யோகா தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதும் பலன் தரும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.