மூட்டு வலிக்கு முடிவு கட்ட... சில எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ!

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற நம்மில் பலர் பல வகையான மருந்து மத்திரைகள்,  மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். உடனடி நிவாரணம் பெற மருந்துகள் உதவும் என்றாலும், இயற்கையான முறையில் வலி நிவாரனம் பெற முயற்சிப்பது நிரந்திர தீர்வைத் தரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2024, 11:57 AM IST
  • கை வைத்தியம் மூலம் மூட்டு வலியைக் குறைப்பது சிறந்தது.
  • மூட்டுவலிக்கான இயற்கை வைத்தியம்.
  • இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
மூட்டு வலிக்கு முடிவு கட்ட... சில எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ! title=

முழங்கால் வலி என்பது முதுமை காரணமாக எலும்புகள் பலவீனமடைவதாலோ, மூட்டு தேய்மானத்தினாலோ அல்லது காயம் அல்லது பிற உடல் நல பாதிப்பினாலோ ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை. மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற நம்மில் பலர் பல்வேறு வகையான மருந்து மத்திரைகள்,  களிம்புகள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். உடனடி நிவாரணம் பெற மருந்துகள் உதவும் என்றாலும்,  இயற்கையான முறையில் வலி நிவாரனம் பெற முயற்சிப்பது (Joint Pain Remedies) நிரந்திர தீர்வைத் தரும். 

புதினா இலை 

அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள புதினா இலை மூட்டு வலியைக் குறைக்க (Health Tips) உதவும். இதன் இலைகளை அரைத்து வலி உள்ள இடத்தில் தடவ உடனடி நிவாரணம்  கிடைக்கும்.

இஞ்சி

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவும். நீங்கள் இஞ்சி டீ குடிப்பது பலன் அளிக்கும். அதே போன்று இஞ்சி பேஸ்ட்டை வலி உள்ள இடத்தில் தடவுவதும் நிவாரணம் தரும்.

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவை. மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால், அதன் மருத்துவ பலன்களை முழுமையாக பெறலாம். மஞ்சளை பேஸ்ட் செய்து வலி உள்ள இடத்தில் தடவலாம்.

கொத்தமல்லி இலை 

மருத்துவ குணங்களின் களஞ்சியமான கொத்தமல்லி இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம், தயாமின், வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கொத்தமல்லி இலைகளை சாறு அல்லது கஷாயமாக உட்கொள்ளவதனால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் மற்றும் கிரியேட்டினின் அளவைக் குறைத்து கீல்வாதத்தையும் போக்கும்.

மேலும் படிக்க |  சுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

வெற்றிலை

வெற்றிலைகளை வெறும் வயிற்றில் தொடர்ந்து மென்று சாப்பிடுவது அல்லது வெற்றிலையை கஷாயம் செய்து குடிப்பது, மூட்டு வலியைக் குறைக்கும். மேலும் இது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவையும் குறைக்கிறது. 

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனை வெந்நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது வலி உள்ள இடத்தில் தடவலாம்.

ஒத்தடம்

மூட்டு வலியிலிருந்தும்  உடனடி நிவாரணம் பெற ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ் ஒத்தடம் கொடுக்க, நீங்கள் ஒரு துண்டில் ஐஸ் கட்டியை வைத்து கட்டி கொடுக்கலாம். குறைந்தது 10 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்போது சந்தையில் சூடான மற்றும் குளிர் ஒத்தடம் கொடுக்க உதவும் வகையில் பல வகையான சாதனங்களும் கிடைக்கின்றன.. 

ஓய்வு

மூட்டு வலியிலிருந்தும்  உடனடி நிவாரணம் பெற முழங்கால்களுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம். வலியில் இருந்து நிவாரணம் பெறும் வரை  முழங்கால்களில் முடிந்தவரை அழுத்தத்தை  கொடுப்பதை தவிர்க்கவும். 

மூட்டு வலியைக் குறைக்க மேலே குறிப்பிட்டுள்ள பயனுள்ள இயற்கை வைத்தியங்களை பயன்படுத்தலாம். இருப்பினும், உங்களுக்கு கடுமையான வலி இருந்தால், நிச்சயமாக உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும். உங்கள் மருத்துவரை அணுகவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1
  width="100%"></iframe>

Trending News