Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை

விஞ்ஞானிகள் ஓமிக்ரானின் முக்கிய அறிகுறியாக தொண்டை புண் மற்றும் தொண்டை கரகரப்பை கூறுகிறார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 09:09 AM IST
  • ஓமிக்ரானின் அறிகுறிகள் மிகவும் லேசானவையாக உள்ளன.

    ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணம் மற்றும் சுவை இழப்பு இருக்காது.
  • ஓமிக்ரான் தொண்டைக்கு முன் மூக்கை முதலில் பாதிக்கிறது.
Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை title=

புதுடெல்லி: கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்று உலகளவில் வேகமாக பரவி வருகிறது. எனினும், ஓமிக்ரானால் ஏற்படும் ஆபத்தின் அளவு, டெல்டா மாறுபாட்டை விட குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் நம்புகிறார்கள். 

ஓமிக்ரானின் அறிகுறிகள் (Omicron Symptoms) பற்றி சரியாக தெரிந்துகொண்டால்தான் அது பரவுவதிலிருந்து தடுக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் உதவிப் பேராசிரியர் ஜார்ஜ் மோரேனோ, ஓமிக்ரானின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி கூறியுள்ளார்.

ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவுடன் இந்த அறிகுறிகள் தென்படும் 

இன்சைடரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பேராசிரியர் ஜார்ஜ் மோரேனோ, சமீபத்தில் அவர் பார்த்த நோயாளிகள் தொண்டை புண் (Soar Throat) பற்றிய புகார்களைக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். நோயாளிகளின் தொண்டை வறண்டு இருப்பதாகவும், உணவு உண்ணும்போது கடும் வலி ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

 தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நார்வே விஞ்ஞானிகளும் ஓமிக்ரானின் முக்கிய அறிகுறியாக தொண்டை புண் மற்றும் தொண்டை கரகரப்பை கூறுகிறார்கள். இது தவிர, மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் உடல்வலி போன்ற புகார்களும் நோயாளிகளிடம் இருக்கின்றன. 

ALSO READ | Omicron symptoms: இதுதான் ஒமிக்ரானின் ஆபத்தான ஐந்து அறிகுறிகள் 

ஓமிக்ரானின் அறிகுறிகள் குறித்து ஆய்வு என்ன சொல்கிறது?

Zoe Covid Symptom ஆய்வின்படி, ஓமிக்ரான் நோயாளிகளில் தொண்டைப் புண்தான் முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறியாக உள்ளது. நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிறிஸ்துமஸ் விருந்திற்குப் பிறகு கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேருக்கு தொண்டை வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் மூன்று நாட்களுக்கு தொண்டை வலி நோயாளிகளை பாடாய் படுத்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு mRNA டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள். 

பேராசிரியர் ஜோர்ஜ் மோரேனோ, தன்னிடம் சிகிச்சைக்காக வந்த அனைத்து தடுப்பூசி போட்டுக்கொண்ட நோயாளிகளிலும், ஓமிக்ரானின் அறிகுறிகள் மிகவும் லேசானதாக இருந்ததாகவும் சில நாட்களுக்கு நீடித்ததாகவும் கூறினார். பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களில், சளி மற்றும் குளிர் போன்ற அறிகுறிகள் இருந்தன. அவர்கள் இரண்டே நாட்களில் முழுமையாக குணமடைந்தனர்.

தடுப்பூசி போட்டவர்களிடம் இந்த அறிகுறிகள் முதலில் தோன்றும்

ஆண்டி பெகோஸ், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (HBSPH) இன் நிபுணரான ஆண்டி பெகோஸ் கூறுகையில், தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்ட பிறகு, ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை பிரச்சனை மற்றும் இருமல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன என்றார். டெல்டாவைப் போலன்றி, ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நறுமணம் மற்றும் சுவை இழப்பு இருக்காது. ஓமிக்ரான் தொண்டைக்கு முன் மூக்கை முதலில் பாதிக்கிறது.

ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News