பால்வினை நோய் என்றால் நமக்கு தெரிந்த ஒன்று எச்ஐவி. ஆனால் அது மட்டுமல்லாது வேறு சில பால் வினை நோய்களும் இருக்கிறது. இந்த நோய் குறித்தோ அல்லது நோய் எப்படி பரவுகிறது என்பதோ குறித்தோ பலருக்கும் எவ்வித புரிதலும் இல்லை என்றே கூறலாம். பால்வினை நோய்களால் ஆண்களும் சரி பெண்களும் சரி இரு பாலரும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் முதல் 40 வயதுடைய பெண்கள் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு மிகப்பெரும் தொற்றாக பாலிவினை நோய் உருவெடுத்துள்ளது. இது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிக அளவு பரவுவதாகவும், பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பதுதான் திமுகவின் வேலை - அண்ணாமலை காட்டம்
திருமணத்தை தாண்டி உறவு, அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உடல் ரீதியான உறவால் மட்டுமே இந்த பால்வினை நோய் வருகிறது என எச்சரிக்கும் மருத்துவர்கள், எச்ஐவி போல மேலும் 3 பால்வினை நோய்கள் உள்ளது எனவும் கூறுகின்றனர்.அதாவது, கோனரியா, டிரக்கோமா, சிபிலிஸ், போன்ற பால்வினை நோய்கள் முறையற்ற உறவால் மட்டுமே பரவுகிறது எனவும் இந்த தொற்று பாதிப்பு நோயாளிக்கு தெரியாமலேயே பரவ வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகின்றனர்.
பால்வினை நோய் அறிகுறிகள்
பால்வினை நோய் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு விதமாக தென்படும். ஆண்களுக்கு ஆண் குறியில் புண், சிறு நீர் கழிக்கும்போது வெள்ளை படுதல், எரிச்சர், தோல் வெடிப்பு, கால்களுக்கு இடையே நெரிக்கட்டுதல், அடி வயிறு மற்றும் இடுப்பு வலி போன்றவை தென்படலாம். அதேபோல பெண்களுக்கு, அதிகப்படியான வெள்ளைப்படுதல், மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் வெள்ளைப்படுதல், துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் அறிப்பு மற்றும் எரிச்சல், காய்ச்சலுடன் அடி வயிற்றில் வலி போன்ற சில அறிகுறிகள் தென்படலாம்.
மேலும் படிக்க | திமுகவின் பக்கம் எல்லாவற்றையும் திருப்புகிறாரா எடப்பாடி பழனிச்சாமி ?
பால்வினை நோய் சிகிச்சை
இதுபோன்ற பால்வினை நோய்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்தால் முற்றிலுமாக குணமடைய முடிவும். ஆனால், இரண்டாம் கட்டம் மற்றும் அதை தாண்டினால் நோயின் தாக்கத்தை தனிக்க முடியுமே தவிற குணப்படுத்த முடியாது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், எச்ஐவி, ஹியூமன் பாப்பிலோனா வைரஸ், ஹெபாடிடிஸ் போன்ற மூன்று பால்வினை நோய்கள் சிகிச்சை பெற்றாலும் குணப்படுத்த முடியாதவை. முன்பு கூறியதுபோல இந்த அறிகுறிகள் ஏதேனும் உங்கள் உடலில் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்திற்கும் ஆரம்பமே தீர்வாக அமையும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ