Numerous Medicinal Benefits of Ridge Gourd: உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. அரிய ஊட்டச்சத்துக்கள் இந்நிறைந்த இந்த காயின் மகத்துவம் அறியாமல், பலர் இதை புறக்கணிக்கின்றனர்.
பீர்க்கங்காயில் உள்ள சத்துக்கள்
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள பீர்க்கங்காயில், புரதச்சத்து, இரும்பு சத்து, தையாமின், வைட்டமின் சி, மெக்னீசியம், ரிபோபிளேவின் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களும் நிறைந்தள்ளன. இதனால், இதனை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் எனலாம்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1. இன்றைய வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான தம்பதியினர் குழந்தைபேறுக்காக தவம் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமான விந்தணு எண்ணிக்கை குறைபாடு தீர, பீர்க்கங்காயை தினமும் சேர்த்துக் கொள்வது (Health Tips) பயன் தரும்.
2. பீர்க்கங்காயில் பீட்டா கெரோட்டின் என்னும் உயிர்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், கண்பார்வை கூர்மையாகும். தினமும் 50 மில்லி பீர்க்கங்காய் சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில், தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு அருந்தி வந்தால், கண்பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காணலாம்.
3. பீர்க்கங்காய், மூலநோய் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், மூல நோய்க்கு முக்கிய காரணமாக உள்ள மலச்சிக்கலை நீக்கி, பைல்ஸ் என்னும் மூல நோயை சிறப்பாக கட்டுப்படுத்தும்.
4. செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து இந்த பீர்க்கங்காய். வயிறு உப்புசம், அஜீரண கோளாறுகள் உணவுக் குழாய் மற்றும் வயிறு சம்பந்தமான பல கோளாறுகளுக்கு, பீர்க்கங்காய் அருமருந்தாக இருக்கும்.
மேலும் படிக்க | கல்லீரலை கவனமாய் பாதுகாக்க உதவும் அற்புதமான 5 உணவுகள்
5. சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது பீர்க்கங்காய். பீர்க்கங்காய் ஜூஸை சிறிதளவு தினமும் அருந்தி வர பலன் கிடைக்கும். அதோடு பீர்க்கங்காய் வேரை நன்கு சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து, சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உடையும் என்கின்றனர் ஆயுர்வேத வல்லுநர்கள்.
6. நீரிழிவு நோயாளிகள், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க, பீர்க்கங்காயை தினமும் சாப்பிடலாம். கணையத்தில் இன்சுலினை இயற்கையாக சுரக்க உதவி செய்யும் ஆற்றல் பீர்க்கங்காய்க்கு உண்டு. மேலும் இதில் உள்ள பெப்டைடுகள், ஆல்கலைடுகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
7. இளமையை காக்கும் ஆற்றல் கொண்டது பீர்க்கங்காய், நீர் சத்து நீங்காமல், வறட்சியைப் போக்கி சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க தீர்க்கங்காய் உதவுகிறது.
8. பீர்க்கங்காய் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. பித்தம் மற்றும் கபம் தோஷங்களை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
9. பீர்க்கங்காய் மட்டுமல்லாது அதன் இலைகளும் நன்மை பயக்கக் கூடியவை. இலைகளை சாரெடுத்து அல்லது அரைத்து காயத்தின் மீது தடவினால் காயம் விரைவில் ஆறும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ