Elumichai Juice | தினம் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் போதும்.. என்ன நடக்கும் தெரியுமா?

Elumichai Juice Benefits In Tamil: சரியான அளவில், சரியான நேரத்தில் எலுமிச்சை ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால், நலமோடு ஆரோக்கியமாக வாழலாம். எலுமிச்சை ஜூஸ் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகள என்ன பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 9, 2024, 03:08 PM IST
Elumichai Juice | தினம் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் போதும்.. என்ன நடக்கும் தெரியுமா? title=

Lemon Juice Health Benefits in Tamil: தினமும் தொடர்ந்து ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். இதன் மூலமாக நமக்கு நிறைய மருத்துவ நன்மைகள் கிடைக்கும். வாருங்கள் எலுமிச்சை ஜூஸ் மருத்து நன்மைகளை பற்று தெரிந்துக்கொள்ளுவோம்.

எலுமிச்சை ஜூஸ் மருத்துவ நன்மைகள்

தோலில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள், சுருக்கங்களை எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் குறையும்.

வாய் துர்நாற்றத்தை எலுமிச்சம் ஜூஸ் போக்கி சீரான சுவாசத்தை நமக்கு கொடுக்கும்.

நுரையீரல் தொற்றுகளை எலுமிச்சை ஜூஸ் மூலம் குறைக்கலாம். 

எலுமிச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான விட்டமின் சி என்னும் உயிர் சத்து இருப்பதால்,நாம்து நோய் எதிர்ப்பு சக்தி திறனை எலுமிச்சை ஜூஸ் அதிகப்படுத்தும். 

நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதால், நமக்கு வரும் நோய்களை குறைச்சுக்கலாம். மழை சீசனில் வரும் புதிய தொற்று நோய்களிலும் இருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம்.

எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. மேலும் சிறுநீரக கற்களையும் கரைத்து வெளியேற்றிக் கொள்ளலாம். 

ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கலாம். பிபி என்று சொல்லக்கூடிய பிளட் பிரஷர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறதுக்கு எலுமிச்சை ஜூஸ் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

உங்களுடைய உடல் எடையை, ஆரோக்கியமான முறையில எந்த விதமான சைடு எஃபெக்ட்டும் இல்லாம குறைக்க வேண்டும் என்ப நினைத்தால், எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் கலந்த எலுமிச்சை ஜூஸ்-ஐ தினமும் காலை வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வந்தால், உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொலஸ்ட்ரால்கள் கரைத்து உங்களுடைய உடல் எடையை ஆரோக்கியமான முறையில் சைடு எஃபெக்ட்டே இல்லாம குறைக்கிறதுக்கு எலுமிச்சை ஜூஸ் உதவிகரமாக இருக்கும். 

கடுமையான தொண்டை வலி இருந்தால், எலுமிச்சை ஜூஸ் உட்கொண்டு தொண்டையில் சிறிது நேரம் வைத்து, பிறகு வாய் கொப்பளிச்சால் தொண்டை வலி உங்களுக்கு சரியாகும். 

உங்களுக்கு உடல் சோர்வடையாமல் இருக்க, எப்போதுமே உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள எலுமிச்சை ஜூஸ் எடுத்துக் கொள்ளும்போது ஸ்ட்ரெஸ், டென்சனில் இருந்து ரிலீஃப் கிடைக்கும். 

மலச்சிக்கல் பிரச்சனையால் கடுமையாக அவஸ்தைப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பொழுது செரிமானம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். 

மேலும் படிக்க - தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?

மேலும் படிக்க - டாடா படத்தின் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி! லேட்டஸ்ட் அப்டேட்!

மேலும் படிக்க - உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News