நீரிழிவு நோய்க்கான தீர்வு - நூல்கோல்: உலகெங்கிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதி வேகமாக பெருகி வருவதால், இந்தியா நீரிழிவு நோய் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. நீழிரிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல வகையான முயற்சிகளை எடுக்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் எப்போதும் தங்கள் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகமாவதையும் குறைவதையும் தடுக்க முடியும். நீரிழிவு நோய், இதயம், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளின் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான, நீரிழிவு நோய்க்கு ஏற்ற காய்களை உட்கொள்வதும் மிக அவசியமாகும்.
நீரிழிவு நோயாளிகள் இந்த காயை உட்கொள்ளலாம்
வெங்காயத்தைப் போல தோற்றமளிக்கும் நூல்கோல் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பலனளிக்கும் காயாகும். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், ஃபோலேட், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இதில் உள்ளன. இவையே இந்த காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக இருப்பதற்குக் காரணமாகும். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றன.
நூல்கோலை உட்கொள்வது எப்படி
1. நூல்கோல் கறி
நூல்கோல் சாப்பிடுவதற்கு மிகவும் பொதுவான வழி அதை கறியாக செய்து சாப்பிடுவதாகும். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, இதை மிக எளிதாகவும் சமைக்கலாம். சமைக்கும் போது எண்ணெயைப் பயன்படுத்துவதைக் குறைக்க முயற்சிக்கவும்.
2. நூல்கோல் ராய்தா
காயாக இல்லாமல் நூல்கோலை வித்தியாசமாக சாப்பிட விரும்புபவர்கள், இதை தயிருடன் சேர்த்து ராய்தாவாக உட்கொள்ளலாம். இது மிகவும் ஆரோக்கியமானதாக இருப்பதோடு இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்திருக்கும்.
3. நூல்கோல் சூப்
குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் நூல்கோல் சூப் செய்து குடித்தால், குளுக்கோஸ் அளவை சீராக வைக்க அது உதவும். நூல்கோலைத் தவிர, அதன் இலைகள், தக்காளி, கேரட், மஞ்சள், பூண்டு, கருப்பு உப்பு மற்றும் சில மசாலாப் பொருட்களை சேர்த்து இந்த சூப்பை செய்யலாம்.
4. நூல்கோல் சாலட்
சர்க்கரை நோயாளிகளுக்கு சாலட் வடிவில் நூல்கோலை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் நூல்கோலுடன் தக்காளி, வெங்காயம், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | விந்தணு தரத்தை பாதிக்கும் கொரோனா...? - ஆண்களிடம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ